Mercury Podimas - 2026

கலக்கலாய் ஒரு கருணைகிழங்கு பொடிமாஸ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Mercury Podimas - 2026

கருணைக்கிழங்கு பொடிமாஸ்
தேவையான பொருட்கள் :

கருணைக்கிழங்கு – அரை கிலோ,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
எலுமிச்சம் பழம் – 1,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

கருணைக்கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய கருணைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும்.

கருணைக்கிழங்கு வேகும் வரை மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வேக விடவும். தண்ணீர் ஊற்றிக்கூடாது.

கருணைக்கிழங்கு முக்கால் பாகம் வெந்தவுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு வதக்கவும்.

கருணைக்கிழங்கு வெந்தவுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சேர்த்து இறக்கவும்.

சூப்பரான கருணைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.