Is corn semolina salty - 2026

ஆரோக்கிய சமையல்: சோளரவை உப்பமா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Is corn semolina salty - 2026

சோள ரவை உப்புமா
தேவையான பொருட்கள்:

சோளம் – 1 கப்
அரிசி ரவை – 1 கப்
கோதுமை ரவை – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 1
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – சிறிதளவு
கடலைப்பருப்பு – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
முந்திரி – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சோளத்தை ரவையாக உடைத்துக்கொள்ள வேண்டும். அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பொடியாக நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

கலந்து வைத்திருக்கும் ரவையின் அளவில் 1 பங்குக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும்.

பிறகு உப்பு சேர்த்து, கொதித்ததும் கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவிக் கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும்.

பிடித்தமான காய்கறிகளை சேர்த்தும் சோள ரவை உப்புமா தயாரிக்கலாம். விருப்பப்பட்டவர்கள் சட்னியுடன் சாப்பிடலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.