health tips - 2026

அப்பாச்சி தீர்வு: வலிமை பெற, மண்டைகுத்தல், காசநோய், குழந்தை கக்கல்..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

வலிமை பெற…

பால், நெய், தேன் மூன்றையும் கலந்து சாப்பிட உடலிலுள்ள திசுக்கள் வலிமை பெறுகின்றன. உடல் வளம் பெருகுவதுடன் நரம்புகளும் வலிமை பெறும்.

மண்டைக் குத்தலுக்கு…

இரண்டு டம்ளர் அன்னாசிப் பழச்சாற்றுடன் ஒரு டம்ளர் சர்க்கரை, அரை டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி தேன் போன்ற பதம் வந்ததும் எடுத்து வைத்துக் கொண்டு காலை, மாலை உணவுக்குப் பிறகு இதில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர மண்டைக் குத்தல் நிற்கும்.

காச நோய்க்கு…

தினமும் காலை, மாலை இரண்டு சப்போட்டாப் பழம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வர காச நோய் நீங்கும்.

அருகம்புல்லின் மகிமை

தினசரி அதிகாலை அருகம்புல் சாறு எடுத்து 5 பங்கு தூய்மையான நீருடன் கலந்து பருகி வந்தால் நரம்புத் தளர்ச்சி, மலச்சிக்கல், சளி, இரத்த அழுத்தம், அளவுக்கதிகமான உடலின் எடை போன்ற கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

குழந்தை வாந்தி எடுக்கிறதா?

வெள்ளைப் பூண்டையும் மஞ்சளையும் அம்மியில் வைத்து விழுது போல் அரைத்து ஒரு துணியில் முடிந்து அனவில் காட்டி சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் சாறுடன் சிறிது தேன் கலந்து மூன்று வேளை கொடுக்க நல்ல குணம் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.