மறையும் மெஸேஜில் புதிய அம்சம்! வாட்ஸ் அப்!

whatsapp - 2026

மறைந்து போகும் மெசேஜ் அனுப்பும் அம்சத்தில் வாட்ஸ்அப் மாற்றம் செய்வதற்கான பணியில் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறைந்து போகும் மெசேஜை நீங்கள் அனுப்பும் போது, அந்த மெசேஜ் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்காது. வாட்ஸ்அப் தற்போது புதிய சோதனையில் ஈடுபட்டிருக்கிறது.

அது காணாமல் போகும் செய்தியை தக்க வைக்கும் அம்சமாகும். மறைந்து வரும் மெசேஜ் அம்சத்தை பயனுள்ளதாக மாற்றும் புதிய வழிகளை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது.

மெசேஜிங் செயலி மறைந்து வரும் மெசேஜ்களை வைத்திருக்கும் திறனை சோதித்து வருகிறது. வாட்ஸ்அப் அம்சம் இந்த வளர்ச்சியில் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

டிஸ்அப்பியரிங் அதாவது மறைந்து வரும் மெசேஜ்களை பயனுள்ளதாக மாற்றும் புதிய வழிமுறைகளை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. மறைந்து போகும் செய்திகளை நீங்கள் அனுப்பும் போது அந்த மெசேஜ் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட சமயங்களில் நீங்கள் அனுப்பப்பட்டிருக்கும் அம்சம் இயக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் அனுப்பும் மெசேஜ் மறைந்துவிடும். இதை தவிர்ககும் விதமாக வாட்ஸ்அப்பில் விரைவில் அறிவிக்கப்படும் இந்த அம்சமானது “காணாமல் போகும் மெசேஜை வைத்திருங்கள்” என அழைக்கப்படும் அம்சம் ஆகும்.

வாட்ஸ்அப் பீட்டா கண்காணிப்பு தளமான Wabetainfo அறிக்கையில் இது தெரிவித்திருக்கிறது. இந்த அம்சங்களை முதலில் கண்டறிந்து கூறியது Wabetainfo ஆகும். டிப்ஸ்டர் பகிர்ந்த ஸ்க்ரீன் ஷாட் படி., மறைந்து போகும் மெசேஜ் ஆக்டிவேட் செய்து அனுப்பி இருக்கும் போது இந்த செய்தியை நீங்கள் அரட்டையில் வைத்திருக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும்.

நீங்கள் இதை இயக்கும் போது மெசேஜ் மறைந்துவிடும் காலம் முடிந்த பிறகும் அது அரட்டைியல் இடம்பெறும். தேவையான மெசேஜ்கள் மறைந்து விடும் அம்சத்தினால் அழிந்து விடுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது சோதனை கட்டத்தில் இருப்பதால் இந்த அம்சத்தின் நோக்கம் மாற்றப்படலாம் எனவும் நிராகரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்திலும் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறது.

வாட்ஸ்அப் புதிய போல் (POLL) அம்சத்தை கொண்டுவர இருக்கிறது. இந்த அம்சம் சோதனையில் இருக்கிறது. WABetaInfo தளத்தின் தகவலும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இந்த அம்சமானது ஐஓஎஸ் பயனர்களுக்கு முதற்கட்டாக அறிமுகப்டுத்தப்பட இருக்கிறது. இந்த அம்சமானது v2.22.6.70 என்ற பீட்டா பதிப்பு எண் உடன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

போல் (POLL) அம்சம்
பேஸ்புக் தளத்தில் முன்னதாக போல் (POLL) அம்சம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து வாட்ஸ்அப்பில் போல் (POLL) அம்சம் குழுக்கள் உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

இந்த போல் (POLL) அம்சத்தை இயக்கிய உடன் குழு உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த அம்சமானது பீட்டா சோதனையில் இருக்கிறது. விரைவில் இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்-ல் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் செய்யும் போது இனி இடைநிறுத்தம் செய்து மீண்டும் தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வாய்ஸ் நோட்களை பதிவு செய்யும் போது அந்த ஆடியோவை இடைநிறுத்தம் செய்து மீண்டும் தொடங்குவதற்கான அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிடுகிறது.

இந்த அம்சமானது குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறுது. வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்களை உருவாக்கி வருகிறது.

மெசேஜ் ரெக்கார்டிங் செய்யும் போது பயனர்கள் ஆடியோவை இடைநிறுத்தி மீண்டும் தொடங்கும் வகையிலான அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கிறது. வாட்ஸ்அப் பீட்டாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது போன்று பயனர்கள் வாட்ஸ்அப் அழைப்புகளில் எளிதாக இணைவதற்கு லிங்க் அனுப்பும் அம்சத்தையும் கொண்டுவரவுள்ளது. இதன்மூலம் நமது தொடர்பில் இல்லாதவர்கள் கூட அந்த லிங்கை கிளிக் செய்து அழைப்பில் இணையலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories