whatsapp - 2026

வாட்ஸ்அப்பில் வந்த அப்டேட்ஸ்..!

லைஃப் ஸ்டைல் அடடே... அப்படியா? தொழில்நுட்பம்
whatsapp - 2026

விண்டோஸ் தளத்தில் வாட்ஸ்அப் சாட்களை அர்சிவ் செய்வதற்கான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது.

சாட்களை அர்சிவ் செய்யும் வசதி ஏற்கனவே மொபைல் ஃபோன்களில் பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது அதே வசதியை விண்டோஸ் பிசி-யில் அறிமுகம் செய்வதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.

விண்டோஸ் வெர்சன் 2.2213.3.0 என்ற தளத்திற்கான அர்சிவ் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதித்து வருகிறது என்பதை, அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் WABetaInfo நிறுவனம் கண்டறிந்துள்ளது.

யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்மில் உள்ள வாட்ஸ் அப்-பில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்றும், தற்போது விண்டோஸ் நேடிவ் ஆப்-பிற்கான மேம்பாட்டு நிலையில் இது இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

பேட்டா வெர்சனில் அர்சிவ் வசதி சுமூகமாக நடைபெறவில்லை என்றும், அன்அர்சிவ் செய்யும்போது வாட்ஸ்அப் சாட் லிஸ்ட் ரெஃப்ரெஷ் ஆகவில்லை என்றும் WABetaInfo நிறுவனத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், மொபைல் ஆப்-பில் ஏற்கனவே அர்சிவ் மற்றும் அன்அர்சிவ் போன்ற வசதிகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன.

அதே சமயம், விண்டோஸ் தளத்திற்காக வெளியிடப்பட்ட லேட்டஸ்ட் பேட்டா வாட்ஸ் அப் வெர்சனில் மீடியா, ஃபைல்ஸ், லிங்க்ஸ், என்கிரிப்ஷன் மற்றும் குரூப்ஸ் ஆகியவற்றுக்கு புதிய ஐகான்கள் இடம்பெற்றுள்ளன.

மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் தளத்திற்கு சென்று வாட்ஸ்அப்-பின் லேட்டஸ்ட் வெர்சனை வாட்ஸ்அப் பேட்டா டெஸ்டர்கள் அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஆனால், இது வாடிக்கையாளர்களுக்கான அப்டேட் அல்ல. வாடிக்கையாளர்களுக்கு எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து தெளிவான தகவல் வெளிவரவில்லை.

இனி சேவ் செய்யாத நம்பர்களுக்கும் சாட் செய்யலாம் :

வாட்ஸ்அப்-பில் இதுவரை யாருக்கேனும் நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், அவர்களது நம்பரை சேவ் செய்த பிறகே அனுப்ப முடியும். ஆனால், இப்போது நம்பரை சேவ் செய்யாமலேயே மெசேஜ் அனுப்புவதற்கான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது.

வாட்ஸ்அப் பேட்டா ஆண்டிராய்டு வெர்சன் 2.22.8.11 தளத்தில், காண்டாக்ட் லிஸ்டில் இல்லாத நபர்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்-பில் உங்களுக்கு விருப்பமான சாட்களை அர்சிவ் செய்து கொள்ளலாம். முதலில் நீங்கள் அர்சிவ் செய்ய விரும்பும் தனிநபர்கள் அல்லது குரூப் சாட்களின் மீது லாங்க் பிரஸ் செய்து அவற்றை தேர்வு செய்ய வேண்டும்.

இதற்குப் பிறகு ஆப்சன்ஸ் சென்று அர்சிவ் என்பதை தேர்வு செய்து ஓகே கொடுக்க வேண்டும்.

வாட்ஸ் ஆப்பில் புதிய இமேஜ் எடிட்டிங் அம்சத்தையும் கொண்டு வரவுள்ளது. இதன்படி புகைப்படத்தை அனுப்பும்போது நாம் அதில் ஏதேனும் வரைய வேண்டும் என்றால் பென்சில் டூல் மூலம் வரைந்து பிறகு அனுப்ப முடியும்.

இந்த பென்சில் டூல் ஏற்கனவே இருந்தாலும் தற்போது வரும் புதிய அப்டேட்டில் புதிதாக 3 பென்சில் டூல்கள் இடம்பெறவுள்ளன. அதேபோன்று புகைப்படங்களை ப்ளர் செய்து அனுப்பும் அம்சமும் வாட்ஸ்ஆப்பில் இடம்பெறவுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.