இன்ஸ்டாவில் புதிய அம்சம்.. பயனர்கள் குஷி!

Instagram - 2026

பிரபல சமூக ஊடகத்தளமான இன்ஸ்டாகிராம், தன் பிளாட்ஃபார்மில் சேர்ப்பதற்காக ஒரு புதிய அம்சத்தை டெஸ்ட் செய்து வருகிறது.

அந்த அம்சம் யூசர்கள் தங்கள் ப்ரொஃபைல்களில் தாங்கள் விருப்பப்பட்ட போஸ்ட்-களை ‘பின்’ செய்து வைக்க அனுமதிக்கும். அதாவது உங்கள் ‘கூகுள் கீப்’ மெயின் ஸ்க்ரீனின் மேற்புறத்தில் உள்ள ‘பின்’ செய்யப்பட்ட நோட்ஸ்-களைப் போலவே, இன்ஸ்டாகிராமில் பின் செய்யப்படும் சில முக்கிய போஸ்ட்கள் மூலம், உங்கள் ப்ரொஃபைலை பார்க்கும் பார்வையாளர்கள் உங்களைப் பற்றி விரைவாக தெரிந்துகொள்ள முடியும்.

டெக் க்ரன்ச் வழியாக வெளியான ஒரு புதிய அறிக்கையின்படி, சோதனை செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த அம்சம் தற்போது சில பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது.

அந்த யூசர்கள் ட்விட்டரில் பின் செய்யப்பட்ட ட்வீட்கள் அல்லது டிக்டாக்கில் உள்ள வீடியோக்களைப் போலவே தங்கள் ப்ரொஃபைல்களில் போஸ்ட்களை பின் செய்யலாம்.

இந்த அம்சம் பல மாதங்களாக செயல்பாட்டில் இருப்பதாகவும் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

குறிப்பிட்ட அம்சத்திற்கான அணுகல் உள்ளவர்கள், ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் ‘த்ரீ டாட்ஸ் மெனு’வில் உள்ள ‘பின் டூ யுவர் ப்ரொஃபைல்’ (Pin to your profile) என்கிற விருப்பத்தைப் பார்ப்பார்கள்.

இதுகுறித்து மெட்டாவின் செய்தித் தொடர்பாளர், “நாங்கள் ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறோம், இது யூசர்களின் ப்ரொஃபைலில் போஸ்ட்களை இடம்பெற அனுமதிக்கும்” என்று தெரிவித்து உள்ளார்.

நினைவூட்டும் வண்ணம், பிரபல ட்விட்டர் யூசர் ஆன அலெஸாண்ட்ரோ பலுஸி இந்த அம்சத்தை கடந்த ஜனவரியிலேயே கண்டறிந்தார், மேலும் இந்த ‘பின்னிங்’ விருப்பம் எப்படி இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார்.

பின் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் ஆனது, கிரியேட்டர்ஸ் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் தங்கள் ப்ரொஃபைல்களின் மேல் தங்களின் சிறந்த படைப்புகளை முன்னிலைப்படுத்த அனுமதிக்கும்.

இதனால் இன்ஸ்டாகிராமில் பார்வையாளர்கள் தங்களுக்குத் தேவையானதை கண்டுபிடிக்க பல போஸ்ட்களை ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

குறிப்பாக கலைஞர்கள் தங்களின் சிறந்த மற்றும் மிகவும் பொருத்தமான படைப்புகளை காட்சிப்படுத்ததும் ஒரு ‘போர்ட்ஃபோலியோவாக’ இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

ஆனால் இந்த அம்சம் அனைத்து இன்ஸ்டாகிராம் யூசர்களுக்கும் கிடைக்க நீண்ட காலம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளவும். ஏனெனில் இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ளது .

எனவே இது ஸ்டேபிள் வெர்ஷனுக்கு வர இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம். மேலும் இன்ஸ்டாகிராம் நிறுவனம், ஒரு புதிய அம்சத்தை அனைவருக்கும் அறிமுகம் செய்யும் முன்னர், குறிப்பிட்ட சில நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அதை அறிமுகம் செய்யும் வழக்கத்தினை கொண்டுள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட அம்சத்தை பார்க்க இந்திய பயனர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அனைவருக்கும் இந்த அம்சம் எப்போது வரும் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories