
தேர்தல் காலத்தில் சென்னை சத்தியமூர்த்திபவன் என்ன பாடுபடுமோ அதே நிலைக்கு ஆளாகியிருக்கின்றது நெல்லை சி.எஸ்.ஐ சபையின் அலுவலகம்
சர்ச் ஆஃப் சௌத் இண்டியா என்ற தென்னிந்திய சர்ச்சின் வரலாறு கொஞ்சம் சுவாரஸ்யமானது. கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர் அல்லாதவர்கள் பிரிவினை சபைகள் (சர்ச்), அதாவது தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்பது போல இவர்களில் யார் வேண்டுமானாலும் சபை தொடங்கலாம்
போர்ச்சுகீசியர் காலத்தில் இங்கே கிறிஸ்தவம் வாடிகனின் போப்பினை தலைவராக கொண்ட இயக்கமாக பரவியது, இயேசு சபை இதில் முக்கியமானது. பின்னாளில் பிரிட்டிசார் ஆதிக்கம் பெற்றபோது அவர்கள் பின்பற்றிய சபைகளின் ஆதிக்கம்வந்தது . ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆங்கிலிக்கன், மெதடிஸ்ட் என ஏகபட்ட பிரிவுகள் உண்டு.
இந்தியாவிலும் 18ம் நூற்றாண்டில் இந்த சபையின் தாக்கம் இருந்தது, ஆளாளுக்கு வந்து குவிந்தார்கள். இந்திய மக்களின் வரிபணம் பிரிட்டனுக்கு செல்ல அதில் மிகசிறிய பகுதி இந்தியர் நலன் என இந்த சபைகள் மூலமே மதமாற்றத்துக்கு பயன்பட்டது, அதற்கு கல்வி, மருத்துவம் என சாயமடிக்கபட்டது.
இந்துக்களின் அறியாமையினை அப்படி பயன்படுத்திகொண்டார்கள், அடித்ததும் அவர்களே, அடித்துவிட்டு இருப்பதை சுரண்டியதும் அவர்களே. பின் அழாதே என கண்ணீர்துடைத்து மதமமாற்ற வந்ததும் அவர்களே!
19 நூற்றாண்டில் தமிழகம் மற்றும் இலங்கையில் ஏகபட்ட சபைகள் இருந்தன, ஆங்கிலிக்கன், மெதடிஸ்ட் சபையின் தாக்கங்களில் நிறைய சபைகள் இருந்தன. அந்த பெரும் சபைகளும் வலுவாக இருந்தன, காரணம் பிரிட்டனின் மதம் ஆங்கிலிக்கன் சர்ச். இந்தியாவில் இந்து மகாசபை உள்ளிட்ட அமைப்பு, முஸ்லீம் லீக் அமைப்பு தோன்றும் போது அவர்களும் சுதாரித்து தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள்.
தென்னிந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த லண்டன் மிஷனெரி சங்கம் (LMS), மதுரை அமெரிக்கன் மிஷன், மற்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் அமெரிக்கன் மிஷன் சபை, போன்றவைகள் ஒன்று சேர்ந்து தென்னிந்திய ஜக்கியச் சபை – (S.I.U.C) என்று ஓர் அமைப்பை உருவாக்கி இருந்தன. இது சில காலம் நீடித்தது
இந்நிலையில் இந்திய சுதந்திரம் நெருங்கிற்று, இந்தியா பிரிவினையில் சிக்கி பெரும் குழப்பத்தில் ஆழ ஆரம்பித்தது. இந்தியாவுக்கு பிரிட்டிசார் சுதந்திரம் கொடுத்துவிட்டு வெளியேறபோகின்றனர், இனி இங்கே கிறிஸ்தவ ஆட்சி இல்லை என்றதும் சபைகள் ஒன்று கூட தொடங்கின.
இனி இந்து ஆட்சிதான் வரும், சபைகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தமுடியாது என அவை ஒன்றாகின. அந்நேரம் இலங்கைக்கு சுதந்திரம் இல்லை என்பதால் இலங்கை கணக்கில் எடுக்கப்படவில்லை. மாறாக தென்னிந்தியாவின் சபைகளெல்லாம் ஒன்றாக தொடங்கின, வடக்கே இந்தியா பாகிஸ்தான் பிரிவினை உச்சத்தில் இருந்ததாலும் அங்கே காலமெல்லாம் அணல் வீசியதாலும் சபைகள் தாக்கம் இல்லை.
சபைகள் பெருகியது தென்னகத்தில் அதுவும் தமிழகத்தில்தான் அதிகம். இப்படி ஆங்கிலிக்கன், மெதடிஸ்ட் ஆகிய சபைகள் சேர்ந்து தென்னிந்திய சர்ச் (சபை) என ஒன்றை 1947ல் உருவாக்கின. இந்திய சுதந்திரத்தின் ஒருமாதம் கழித்து இது நடைமுறைக்கு வந்தது, அன்று இவைகளின் அதிபர்களாக பிரிட்டிஷார்தான் இருந்தார்கள்.
நாட்டைவிட்டு அவர்கள் செல்லும்போது இப்படி உருவாக்கி உள்ளூர் பக்தர்களிடம் கொடுத்துச் சென்றார்கள். தென்னிந்திய சபையின் ஐக்கியத்தில், ஆர்காட் லூத்தரன் சபை (ALC), தமிழ் நாடு இவாஞ்சலிக்கல் லூத்தரன் சபை (TELC), செவந்த்டே அட்வென்டிஸ்டு சபை, இரட்சணிய சேனை சபை (Salvation Army), பெந்தேகோஸ்தே சபை, போன்றவைகள் இணைவதற்கு முன்வரவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது. அவை இன்றும் தனியாக உண்டு.
இந்த தென்னிந்திய சபையின் ஒரு மண்டலம் நெல்லையில் உண்டு, இதற்கு தனி பிஷப் உள்ளிட்ட அதிகாரம் உண்டு. இந்தியாவில் வாடிகன் போப்பின் சபைக்கு அடுத்து மிகபெரிய சபை இதுதான், அவ்வகையில் இந்த சபைக்கு சொத்து அதிகம், அதுவும் பிரிட்டிசார் முதலில் காலூன்றிய நெல்லை பக்கம் சொத்து மிக அதிகம். இதனால் அடிக்கடி பெரும் சர்ச்சைகளும் வரும்,அது அடிதடியாகும்.
நெல்லை நீதிமன்றத்தின் பெரும் வழக்குகள் இந்த சபை சொத்துக்களை சார்ந்ததாக இருக்கும். இப்படி சொத்து இருப்பதால் அரசியலில் யார் ஆதிக்கம் செலுத்துவார்களோ அவர்கள் கரம் அடிக்கடி நுழையும். சில வருடங்களுக்கு முன்பு விவி வைகுண்டராஜன் கரங்களும் உள்ளே இருந்தன எனும் அளவு இது அரசியல் நிரம்பிய சபை. ஏகபட்ட சொத்துக்கள் கல்வி நிறுவணங்கள் உண்டு என்பதால் அரசியல் ஆதரவும் அங்கே அவசியம் அது இயல்பே!
இப்போது நெல்லை எம்பி கரம் இருக்கின்றது என்கின்றார்கள். அடிக்கடி அடிதடி நடப்பதெல்லாம் அங்கே வாடிக்கை, ஆச்சரியம் என்னவென்றால் ஒரே சாதி ஒரே மதம் ஒரே பைபிள் ஒரே வழிபாடு. ஆயினும் அடிதடி என்பது சொத்து நிர்வாகம், செல்வாக்கு , அதிகாரத்தில் நடக்கும். அவர்கள் ஆன்மீகத்தை விட அது வலுவானது.
இப்போது வழமை போல் மறுபடியும் மோதிக் கொள்கின்றார்கள், பாதிரி தாக்கப்பட்டிருக்கின்றார். சென்னை சத்தியமுர்த்தி பவன் அருகிருக்கும் வேட்டிகடை, செருப்புகடைக்கு அங்கே கூட்டம் நடக்கும் நேரம் நலல வியாபாரம் நடக்கும், அப்படி இப்போது நெல்லை மருத்துவமனைகள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன.
இதெல்லாம் அரசு தலையிட்டு தீர்க்க வேண்டியவிஷயங்கள். அவை ஆன்மீக நிலையமாக அல்ல, பள்ளி கல்லூரி என கல்வி நிலையங்கள் எனும் வகையில் முன்பு அண்ணாமலை பல்கலைகழகம் , அழகப்பா பல்கலைகழகம் என கையில் எடுத்த அரசு இந்த கல்வி நிலையங்களை கருத்தில் கொண்டால் நல்லது. ஆனால் சிறுபான்மை என்பதால் செய்யமாட்டார்கள், தமிழக இயல்பு அது!
அவர்களின் வழிபாட்டு இடம் பற்றி யாரும் பேசமுடியாது, தமிழக சட்டம் அதற்கு அனுமதிக்காது, ஆனால் கல்வி நிலையங்கள் முக்கியமானவை. அரச சம்பளத்தில் இயங்குபவை என்பதால் அரசு முயற்சிக்கலாம், அதை காட்டி அவர்கள் மோதும்போது அது சரியானதாகவும் அமையும்!
- பிரம்மரிஷியார்