spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்இன்று... துளசி கல்யாணம் விசேஷம்!

இன்று… துளசி கல்யாணம் விசேஷம்!

- Advertisement -
tulsi kalyanam
  • கே.ஜி. ராமலிங்கம்

‘துளஸி! அமிர்த ஜன்மாஸி! சதாத்வம் கேசவப்ரியே!”
(तुलसि अमृत जन्मासि, सदा त्वं केशव प्रिये)
(அம்மா தாயே! துளசி! நீ அமிர்தத்தின் உறைவிடம் அல்லவா! உன்னிடத்தில் அல்லவா அந்த கேசவனுக்கு ரொம்பப் ப்ரியம்.)

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதி அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதால் “பிருந்தாவன துவாதசி’ என்று பெயர். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசிக்கு இணையான மகத்துவம் கொண்டது. இதை குருவாயூர் ஏகாதசி என்றும் அழைப்பார்கள். குருவாயூரப்பனும் குருவாயூர் கேசவன் என்று அழைக்கப்பட்ட கஜராஜன் பகவான் பாதகமலத்தை அடைந்த தினம். வருடாவருடம் குருவாயூர் ஏகாதசி அன்று மற்ற கஜங்கள் அணிவகுக்க அன்றைய பிரதம கஜராஜன் முன்னிலையில் சிலை வடிவில் உள்ள குருவாயூர் கேசவனுக்கு அஞ்சலி செலுத்தும் வைபவம் இன்றும் நடந்து வருகிறது. அதற்கு மறுநாள் வரும் துவாதசி தினம் “பிருந்தாவன துவாதசி” .

நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகாவிஷ்ணுவை பிருந்தாவன துவாதசி நாளில் “உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ’ என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.

துவாதசியன்று அதிகாலையில் திருமணமானப் பெண்கள் நீராடியபின் துளசி செடியாக வைத்திருந்தாலும், துளசிமாடமாக இருந்தாலும், முதலில் அதனை சுத்தம் செய்து, மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும்.

துளசியோடு ஒரு நெல்லி மரக்கன்றை இணைத்து வைத்து, இரண்டுக்கும் பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். விஷ்ணுவின் படமோ, அல்லது கிருஷ்ணனின் படமோ வைத்தும் அலங்கரிக்கலாம்.

துளசி செடிக்கு கருகமணி, நகைகள் அணிவித்து மணப்பெண்ணிற்கு அலங்கரிப்பது போல் அலங்காரத்தை முதலில் செய்யலாம். துளசியையும், விஷ்ணுவையும் மணக்கோலத்தில் அலங்கரித்து விட்டு, பின்பு நம்மால் முடிந்த நைவேத்தியத்தை சமர்ப்பித்து, வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் வைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி தீப தூப ஆராதனையுடன் இந்த துளசியை வழிபட வேண்டும்.

அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர
பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ’

இந்த நாளில்தான் துளசி தாயார் மஹாவிஷ்ணுவை மணந்து கொண்டதாக விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. துளசி என்ற சொல்லுக்கு “தன்னிகரற்றது’ என்று பொருள். விஷ்ணு ப்ரியா , ஹரிப்ரியா என்று போற்றப்படும் துளசிதேவியை இந்தப் புண்ணிய நாளில் விரதமிருந்து வழிபட அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.

நெல்லி மரம் மகாவிஷ்ணுவின் அம்சம் என்பதால் இதை துளசி விவாகம் என்றே பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்நாளில் துளசி விவாகம் செய்து வழிபடுவது இல்லறத்தை இனிமையாக்கும் .

இந்தத் துளசி திருமண பூஜைக்கு நம் சுற்றத்தில் உள்ளவர்களை அழைத்து பூஜையில் கலந்துகொள்ள செய்து, அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழி அனுப்பி வைப்பது என்பது மேலும் நன்மையை தரும். துளசியின் அடிபாகத்தில் சிவபெருமானும், துளசியில் மத்தியில் மகாவிஷ்ணுவும், துளசியின் நுனியில் பிரம்மனும் வாசம் செய்வதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

மகாவிஷ்ணுவை மணாளனாக அடைவதற்காக பிருந்தை என்ற பெண் தவமிருந்தாள். அதன்படி பிருந்தை என்ற பெயரிலேயே பிறந்தாள்; ஜலந்திரன் என்ற அசுரனை மணந்தாள்.

முற்பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில் ஜலந்திரனின் மனைவியாக இருந்து, பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார்..செடியாய்ப் பிறந்த துளசியை சாளக்கிராமத்தோடு (கிருஷ்ணனோடு) சேர்த்து பூஜிப்பது விசேஷம்…

கிருஷ்ணன் தன்னைவிட்டுப் பிரியாமல் இருக்க நாரதர் `கூறிய யோஜனைப்படி சத்தியபாமாவும்,உத்தமரான உமக்கே கிருஷ்ணரை தானமாகத் தந்தோம்” என்று கூறி நாரதருக்கே கிருஷ்ணரை தானமாகக் கொடுத்தாள்.

நாரதர் கிருஷ்ணருக்குப் பதிலாக அவரது எடைக்கு எடை நவரத்தினங்களையும் தங்கத்தையும் தனக்குக் கொடுக்கும்படி கேட்டார். தராசில் எவ்வளவு செல்வங்களை வைத்தபோதும் கிருஷ்ணன் இருந்த தட்டு தான் இறங்கி இருந்தது.

ருக்மிணிதேவி கிருஷ்ணார்ப்பணம் என்று துளசி தளத்தைக் கொண்டு வந்து இரண்டாவது தட்டில் வைத்தாள். தராசின் இரண்டு தட்டுக்களும் நேராயின. துளசியின் மகிமை அனைவருக்கும் புரிந்தது. கிருஷ்ணாவதாரத்தில் துளசிதான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் . துளசி பாற்கடலில் தோன்றியது. துளசி தெய்வீக சக்தி கொண்டது.

பெருமாள் கோவில்களில் துளசிவனம், துளசிமாடம் இருக்கும். துளசி மாடத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறும். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் மிகவும் போற்றப் கூடிய துளசி மாடம் மற்ற துளசிமாடத்தைவிட மாறுபட்டது. ஆமையின் திருவுருவத்தின் மேல் அமைந்துள்ள துளசி மாடம். அருகில் வில்வமரமும் உள்ளது.


துளசி விவாஹமான இன்று நாம் சொல்லி அர்ச்சிக்க…

துளசி அஷ்டோத்திர சத நாமாவளி


ஓம் துளஸ்யை நம:

ஓம் பாவந்யை நம:

ஓம் பூஜ்யாயை நம:

ஓம் வ்ருந்தாவநநிவாஸிந்யை நம:

ஓம் ஜ்ஞாநதாத்ர்யை நம:

ஓம் ஜ்ஞாநமய்யை நம:

ஓம் நிர்மலாயை நம:

ஓம் ஸர்வபூஜிதாயை நம:

ஓம் ஸத்யை நம:

ஓம் பதிவ்ரதாயை நம:

ஓம் வ்ருந்தாயை நம:

ஓம் க்ஷீராப்திமதநோத்பவாயை நம:

ஓம் க்ருஷ்ணவர்ணாயை நம:

ஓம் ரோகஹந்த்ர்யை நம:

ஓம் த்ரிவர்ணாயை நம:

ஓம் ஸர்வகாமதாயை நம:

ஓம் லக்ஷ்மீஸக்யை நம:

ஓம் நித்யஸுத்தாயை நம:

ஓம் ஸுதத்யை நம:

ஓம் பூமிபாவந்யை நம:

ஓம் ஹரித்யாநைகநிரதாயை நம:

ஓம் ஹரிபாதக்ருதாலயாயை நம:

ஓம் பவித்ரரூபிண்யை நம:

ஓம் தந்யாயை நம:

ஓம் ஸுகந்திந்யை நம:

ஓம் அம்ருதோத்பவாயை நம:

ஓம் ஸுரூபாரோக்யதாயை நம:

ஓம் துஷ்டாயை நம:

ஓம் ஸக்தித்ரயரூபிண்யை நம:

ஓம் தேவ்யை நம:

ஓம் தேவர்ஷிஸம்ஸ்துத்யாயை நம:

ஓம் காந்தாயை நம:

ஓம் விஷ்ணுமந: ப்ரியாயை நம:

ஓம் பூதவேதாலபீதிக்ந்யை நம:

ஓம் மஹாபாதகநாஸிந்யை நம:

ஓம் மநோரதப்ரதாயை நம:

ஓம் மேதாயை நம:

ஓம் காந்தாயை நம:

ஓம் விஜயதாயிந்யை நம:

ஓம் ஸங்கசக்ரகதாபத்மதாரிண்யை நம:

ஓம் காமரூபிண்யை நம:

ஓம் அபவர்கப்ரதாயை நம:

ஓம் ஸ்யாமாயை நம:

ஓம் க்ருஸமத்யாயை நம:

ஓம் ஸுகேஸிந்யை நம:

ஓம் வைகுண்டவாஸிந்யை நம:

ஓம் நந்தாயை நம:

ஓம் பிம்போஷ்ட்யை நம:

ஓம் கோகிலஸ்வராயை நம:

ஓம் கபிலாயை நம:

ஓம் நிம்நகாஜந்மபூம்யை நம:

ஓம் ஆயுஷ்யதாயிந்யை நம:

ஓம் வநரூபாயை நம:

ஓம் துக்கநாஸிந்யை நம:

ஓம் அவிகாராயை நம:

ஓம் சதுர்புஜாயை நம:

ஓம் கருத்மத்வாஹநாயை நம:

ஓம் ஸாந்தாயை நம:

ஓம் தாந்தாயை நம:

ஓம் விக்னநிவாரிண்யை நம:

ஓம் ஸ்ரீவிஷ்ணுமூலிகாயை நம:

ஓம் புஷ்ட்யை நம:

ஓம் த்ரிவர்கபலதாயிந்யை நம:

ஓம் மஹாஸக்த்யை நம:

ஓம் மஹாமாயாயை நம:

ஓம் லக்ஷ்மீவாணீஸுபூஜிதாயை நம:

ஓம் ஸுமங்கல்யர்சனப்ரீதாயை நம:

ஓம் ஸெளமங்கல்யவிவர்திந்யை நம:

ஓம் சாதுர்மாஸ்யோத்ஸ-வாராத்யாயை நம:

ஓம் விஷ்ணுஸாந்நியதாயிந்யை நம:

ஓம் உத்தானத்வாதஸீபூஜ்யாயை நம:

ஓம் ஸர்வதேவப்ரபூஜிதாயை நம:

ஓம் கோபீரதிப்ரதாயை நம:

ஓம் நித்யாயை நம:

ஓம் நிர்குணாயை நம:

ஓம் பார்வதீப்ரியாயை நம:

ஓம் அபம்ருத்யுஹராயை நம:

ஓம் ராதாப்ரியாயை நம:

ஓம் ம்ருகவிலோசநாயை நம:

ஓம் அம்லாநாயை நம:

ஓம் ஹம்ஸகமநாயை நம:

ஓம் கமலாஸநவந்திதாயை நம:

ஓம் பூலோகவாஸிந்யை நம:

ஓம் ஸுத்தாயை நம:

ஓம் ராமக்ருஷ்ணாதிபூஜிதாயை நம:

ஓம் ஸீதாபூஜ்யாயை நம:

ஓம் ராமமன:ப்ரியாயை நம:

ஓம் நந்தநஸம்ஸ்த்திதாயை நம:

ஓம் ஸர்வதீர்த்தமய்யை நம:

ஓம் முக்தாயை நம:

ஓம் லோகஸ்ருஷ்டிவிதாயிந்யை நம:

ஓம் ப்ராதர்த்ருஸ்யாயை நம:

ஓம் க்வாநிஹந்த்ர்யை நம:

ஓம் வைஷ்ணவ்யை நம:

ஓம் ஸர்வஸித்திதாயை நம:

ஓம் நாராயண்யை நம:

ஓம் ஸந்ததிதாயை நம:

ஓம் மூலம்ருத்தாரிபாவந்யை நம:

ஓம் அஸோகவநிகாஸம்ஸ்த்தாயை நம:

ஓம் ஸீதாத்யாதாயை நம:

ஓம் நிராஸ்ரயாயை நம:

ஓம் கோமதீஸரயூதீரஸோபிதாயை நம:

ஓம் குடிலாலகாயை நம:

ஓம் அபாத்ரபக்ஷ்யபாபக்ந்யை நம:

ஓம் தாநதோயவிஸுத்திதாயை நம:

ஓம் ஸ்ருதிதாரணஸுப்ரீதாயை நம:

ஓம் ஸுபாயை நம:

ஓம் ஸர்வேஷ்டதாயின்யை நம:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe