இசையமைப்பாளர் மீம்ஸ்களால் கவரப்பட்டு ஒரு பாட்டு போட்டாராம். இதனைத் தன் வார்த்தைகளில் இப்படி வெளிப்படுத்துகிறார்…
வெவ்வேறு காலகட்டங்களில் இசை கலைஞர்களின் பங்களிப்பு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாது, சமூக எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடாகவும் இருந்து வருகிறது. திரைப்படங்களை தாண்டி, நான் சென்ற ஒரு வருட காலமாக இறையருளால் தனிப்பாடல்களையும் இசையமைத்து வெளியிட்டு வருகிறேன். இந்த ஆண்டு நான் வெளியிட்ட “மனிதா மனிதா எழுந்து வா” மற்றும் “ஜீரோ தாண்டா ஹீரோ” ஆகிய தனிப்பாடல்கள் இணையதளத்தில் வெகுவாக வரவேற்கப்பட்டது. அவ்வழியில் “மீம்ஸ் சாங்” என்ற பாடலை தற்போது வெளியிட்டுள்ளேன்.
“மீம்ஸ்” தனிமனிதர் மற்றும் இந்த தலைமுறை மீதும் மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது, வெகு விரைவாகவும் சென்றடைகிறது. இது ஒரு மாடர்ன் மிமிக்ரி என்றே எண்ணுகிறேன். ஐ.டி மீம்ஸ், பி.பி.ஓ மீம்ஸ், கணவன் & மனைவி மீம்ஸ், என்று இதில் பல வகையான மீம்ஸ்கள் பயன்பாட்டில் இருப்பதை கண்டு வியப்படைந்தேன். ஜாதி மதங்களை தாண்டி இது அனைவரையும் சென்றடைந்து மகிழ்ச்சியடைய வைப்பது மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது. போலியான மீம்ஸ் செய்திகள் வந்தால் அதனையும் மீம்ஸ்-ஆக எழுதி அதையும் ட்ரெண்ட் செய்துவிடுகிறார்கள்.
மீம்ஸ் மிகவும் அருமையான வளர்ச்சி, அதனை நம் சமுதாயம் மேலும் அழகுற பயன்படுத்திக்கொண்டால் நமது ஒற்றுமை மேம்படும், தமிழர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று கருதி, எனது இந்த மீம்ஸ் பாடலை நான் எழுதி, இசையமைத்து, பாடி வெளியிட்டுள்ளேன்… என்கிறார் குருகல்யாண்!