உங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு..! ‘பிக்பாஸ்’ வீடு குறித்து பத்த வைத்த ‘அனுபவ’ ஓவியா!

oviya army

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக சில மணி நேரங்கள் நடித்த நடிகை ஓவியா, கிளம்பும் போது, உங்களை எல்லாம் பாத்தா பாவமா இருக்கு என்று பரிதாபப் பட்டு உண்மையைப் போட்டுடைத்துச் சென்றார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அச்சத்தின் உச்சத்துக்கே சென்றனர்.

பிக்பாஸ்-1 மூலம் பிரபலமான நடிகை ஓவியா, இரண்டாவது சீசனில் சிறப்பு விருந்தினராக சில மணி நேரங்கள் கலந்துகொண்டு, தன்னை பிக்பாச் 1ல் பிரபலப் படுத்திய நன்றிக்கடனாக, பிக்பாஸ் வீட்டில் சற்று நேரம் இருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

போட்டியாளர்களில் ஒருவராக நடிக்க வேண்டும் எனச் சொல்லித்தான் ஓவியாவை கமல் உள்ளே அனுப்பினார். ஓவியாவும் கையில் பெட்டியுடன் போட்டியாளர் போன்றே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால், சக போட்டியாளர்கள் அவரை நிஜமாகவே சீசன் 2 போட்டியாளர் என்றே நினைத்துள்ளனர். இதனால் தங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்குமே என்ற கவலையுடன் இருந்துள்ளனர்.

ஆனால், மகத் உள்ளிட்டோர் ஓவியாவைச் சுற்றி வந்து அவர் நிஜமாகவே போட்டியாளரா என விசாரித்தனர். போட்டியாளர் என்றால் ஏன் ஒரு பெட்டியுடன் வந்துள்ளீர்கள்? எங்களுக்கெல்லாம் இரண்டு தந்துள்ளார்களே என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் சந்தேகம் அதிகமானது.

பிறகு அவர் பெட்டியைப் பிடுங்கி சோதித்துப் பார்த்தபோது அதில்  வாட்டர் பாட்டில்கள் இரண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அவர் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வரவில்லை என்று தெரிந்துகொண்டு சற்றே நிம்மதி அடைந்தனர். பின்னர் ஓவியாவும் அப்ரூவராக மாறி, பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டார். அதைத் தொடர்ந்து பிக்பாஸ் அவரை வீட்டில் இருந்து வெளியேறச் சொல்ல, ஓவியாவும் வெளியேறினார்.

அதற்கு முன்னதாக வீட்டில் பேசிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு குறைவாகத் தான் கிடைக்கும் என்ற உண்மையைப் போட்டுடைத்தார். முதல் சீசனின் போது, 55 கிலோ எடையுடன் வந்த தான், வெளியேறும்போது 50 கிலோவாக எடை குறைந்ததாகத் தெரிவித்தார். அதோடு, வீட்டை விட்டு வெளியேற மெயின் கதவு அருகேச் சென்ற ஓவியா, அங்கிருந்த போட்டியாளர்களைப் பார்த்து, ‘உங்களை எல்லாம் பார்க்க பாவமாக இருக்கிறது. இங்க என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும்’ என போகிற போக்கில் பத்த வைத்து விட்டுச் சென்றார்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.