நடிக்க வரலன்னு இயக்குனர்ட்ட போய் கன்னத்துல அறைங்க சார்னு அடம்புடிச்ச நடிகை!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

Thodraa PrithviRajan Veena M S Kumar 7 - 2026

ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

படம் வரும் செப்-7ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியபோது, நாயகி வீணா அந்த காட்சியின் சீரியஸ்னெஸ் புரியாமல் அதிக டேக் வாங்கினார். இதனால் கோபமான இயக்குனர் மதுராஜ் நாயகியின் கன்னத்தில் பளார் என அறைவிட அந்த அதிர்ச்சியுடன், குறிப்பிட்ட அந்த காட்சியில் இயல்பாக நடித்து முடித்தார் வீணா.. இது ஏற்கனவே பரபரப்பை கிளப்பிய செய்தி தான்..

ஆனால் இதேபோல இன்னும் சில சீரியஸான காட்சிகளை படமாக்கும்போது அந்த சீரியஸ் மூடுக்கு வீணாவால் உடனடியாக மாறமுடியவில்லையாம்.. அதற்காகவே இயக்குனர் மதுராஜிடம் அடிக்கடி சென்று “ப்ளீஸ்.. மீண்டும் என்னை கன்னத்தில் அறையுங்கள்” என கேட்டாராம்.

“இது என்னடா வம்பா போச்சு.. ஒருதடவை அறைஞ்சது குத்தமாய்யா” என ஜெர்க் ஆன மதுராஜ் ‘யம்மா ஆள விடு சாமி” என கெஞ்சாத குறையாக நழுவ, ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பானதாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.