‘பொய்கள் புயல் போல் வீசும். ஆனால் உண்மை மெதுவாய் பேசும்!’ கவிஞர் வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான மதன்கார்க்கியின் ட்வீட்டு இது. அதற்கு பிரதிபலனாக டிவிட்டர் தேச வாசக நெஞ்சங்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் மதன் கார்க்கி!
சின்மயி – வைரமுத்து விவகாரத்திற்குப்பின் கவிஞரின் குடும்பத்தைச் சேர்ந்த எவருமே வாய் திறக்காத நிலையில், ஏதோ ரெண்டு வரி போட்டு ஏதோ சொல்ல வர, மதன் கார்க்கி இதைத்தான் சொன்னார் என்று டிவிட்டர் உலகம் புரிந்து கொள்ள, சண்டை ஜரூர்!
மதன் கார்க்கியின் டிவீட்டுக்கு வந்த பதில்கள் எல்லாம் மதன் கார்க்கியின் மண்டையைக் கீறியிருக்கும் என்பது மட்டும் நெசம்!
அவற்றில் சில பதில்கள்… வெகு சுவாரஸ்யமானவை! சொல்லப் போனால், கவிஞர்களைக் காட்டிலும் வாசகக் கவிஞர்கள் ஒரு படி மேலாகவே சிந்திக்கிறார்கள்!
சோழவரத்தான் @SJPSAHA
தலைவா நீங்க எத நினைவில் கொண்டு இதனை ஷேர் செய்தீர் என நான் அறியேன்.. ஆனால் உங்கள் தந்தை மீது ஒருவர் மட்டும் அல்ல நிறைய பேர் குற்றம் சாட்டி உள்ளனர்… ஆராய வேண்டியது நீங்கள் தான்…
இது சின்மயி க்கு நீங்கள் கொடுக்கும் தைரியமா???
Monica jelax @MJelax
நீங்கள் சொல்வது உண்மை தான் பொய்கள்(vairamuthu) புயல்போல் வீசியது-ஆனால் உண்மை மெதுவாக பேசிக்கொண்டு இருக்கிறது(Me too)




