
இலங்கை பிரதமராக ராஜபட்ச நியமிக்கப் பட்டதில், இந்திய அரசுக்கோ, பாஜக.,வுக்கோ துளியும் தொடர்பில்லை என்று கூறியுள்ளார் தமிழக பாஜக., மூத்த தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ள கருத்து…
இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது இன்னொரு நாட்டின் பிரச்சினை என்று ஒதுக்கிவிட முடியவில்லை. ராஜபக்சே தமிழர்கள், தமிழர் நலனுக்கு எதிரானவர் என்றும், இலங்கை இனப்படுகொலைக்கு முக்கிய பங்கு வகிப்பவர் என்றும் அனைவரிடத்திலும் ஒரு எண்ணம் உண்டு. அது வெறும் எண்ணம் மட்டுமல்ல, உண்மையும் கூட.
ராஜபக்சே எதனால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்? என்பதற்கான உரிய விளக்கத்தை இலங்கை அரசு தெரிவித்தாக வேண்டும். பிரதமராக ராஜபக்சே நியமனம் செய்யப்பட்டதில் இந்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது இன்னொரு நாட்டின் விவகாரம். இதில் பா.ஜ.க.வையோ, பிரதமரையோ, இந்திய அரசாங்கத்தையோ தொடர்புபடுத்தி பேசுவது சரியல்ல. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.



