திருவண்ணாமலை கோயிலில் சுவாமி அம்பாள், துர்க்கை கிரிவலம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய அம்சமான பரணி தீபம், கார்த்திகை தீபம் ஏற்றும் வைபவங்கள் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றன.

இந்நிலையில், நவ.25 ஞாயிற்றுக் கிழமை இன்று காலை உண்ணாமுலை அம்மை சமேத அண்ணாமலையார் கிரிவல பிரதட்சிணம் வரும் வைபவம் நடைபெற்றது. உடன் எல்லை காவல் தெய்வமான துர்கை அம்மனும் இந்த கிரிவல பிரதட்சிண வைபவத்தில் எழுந்தருளினார்.