பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்கள் 2 பேர்களை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியை சேர்ந்த வேலாயுதம் மனைவி லட்சுமி நேற்று தனது மகனுடன் ஆலங்குளம் சென்றுவிட்டு பைக்கில் திரும்பியபோது பாவூர்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில்,பைக்கில் சென்ற 2 மர்ம நபர்கள் பைக்கில் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்து தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தேகப்படும்படியாக பாவூர்சத்திரம் செட்டியூர் ரோட்டில் நின்றிருந்த நபரை பாவூர்சத்திரம் போலீசார் பிடித்து விசாரித்தனர் அதில் அந்த நபர்கள் நேற்றுமுன்தினம் இதே போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த நபர்கள் போலீஸ் விசாரணையில் கடையநல்லூர் புளியமுக்கு தெரு அயூப்கான் மகன் யாசிர்முகமது(18) கடையநல்லூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நத்தங்கர்பவா மகன் முகமது ஜமீன் ( 17) என்பதும் தெரியவந்ததுமேலும் இருவரும் ஆடம்பர வாழ்கை வாழ ஆசைபட்டு திருட முயன்ற முதல் நாளில் பிடிபட்டுள்ளனர் .
இருவரும் நண்பர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை இரவல்வாங்கி கொண்டு தூத்துக்குடியில் உள்ள நண்பரை பார்க்க சென்றுள்ளனர் பின்னர் அங்கிருந்து மாலையில் ஊருக்கு திரும்பும் வழியில் முறப்பநாடு ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துள்ளார் அதுவும் கவரிங் நகை ஆகும். இதேபோல் பாளை கேடிசி நகரில் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்து நகை பறிக்க முடியவில்லை, பின்னர் தென்காசி வரும் வழியில் பழைய பேட்டையில் ஒரு பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற போது அந்தப் பெண் இவர்களை கீழே தள்ளியுள்ளார். இதனால் அந்த பெண்ணிடமும் நகை பறிக்க முடியவில்லை. பின்னர் கடையநல்லூர் வரும் வழியில் பாவூர்சத்திரத்தில் லட்சுமி என்ற பெண்ணிடம் பறித்த நகையும் கவரிங் என தெரியவந்துள்ளது. இரண்டு நபர்களையும் கைது செய்த பாவூர்சத்திரம் போலீசார் தென்காசி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர் வயது குறைவு என்பதால் அவர்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்
கவரிங் நகையை பறிக்கப்போய் கம்பி எண்ணும் சிறுவர்கள்
Popular Categories



