கட்டுரை: குச்சனூர் கோவிந்தராஜன்
உத்தர ராமசரிதம் உலக மொழிகளில் மிக பழமையானதாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழும் சம்ஸ்கிருத மொழியில் உள்ள இலக்கியங்கள் ஒவ்வொன்றும் படிக்கவும் ரசிக்கவும் பாதுகாக்கவும் போற்றும் வேண்டியவை
சிறப்புமிக்க இலக்கியங்களை படைத்தவர்களின் மிக சிறப்பு பெற்றவர் பவபூதி என்னும் பண்டிதர் கவிஞனை தாண்டி அறிவித்து சிறந்தவனாக விளங்கியவன் என்பதனாலேயே சரஸ்வதிதேவி பண்டிதன் என்று அடைமொழி கொண்டு அழைத்தாள்
காளிதாசனுக்கு இணையாக பகுதியை சரஸ்வதிதேவி கொண்டாடினாள் காளிதாசனும் பகுதியையும் இணைத்து பல்வேறு கதைகள் உலவுகின்றன அவள் இருவரின் சிறப்பையும் போற்றும் அளவாகவும் இருப்பது அவர்களின் பெருமையை மேலும் பிரகாசிக்கச் செய்கிறது மகாவீர சரிதம் மாலதி மாதவம் உத்தர ராமசரிதம் என மூன்று நாடகங்களை எழுதியுள்ளார்
மகாவீர சரிதமும் உத்தர ராமசரிதம் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக கொண்டவை மாலதி மாதவம் பல சாகசங்களும் நிகழ்வுகளும் கொண்ட காதல் கதை ராமனின் மேல் அதிக அன்பும் பக்தியும் கொண்டவராக திகழ்ந்தார் என்பது அவரின் நாடகங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
வால்மீகி வால்மீகியை அடிப்படையாக கொண்ட கதை என்றாலும் உத்தர ராம சரிதத்தில் முக்கியமான மாறுதலை செய்துள்ளார் இதன்மூலம் ராமனின் செய்கைக்கு நியாயத்தை கற்பிக்கிறார் கவிஞர் என்பதை உணரமுடிகிறது மேலும் பகுதிக்கு சோகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது மூன்று நாடகங்களின் தெளிவாகத் தெரிகிறது சோகமே கருணா ரஸம் முதன்மை பெற்றதாக உத்தர ராமசரிதம் திகழ்கிறது
உத்தர ராம சரிதத்தில் ராமன் சீதை ஜனகன் என அனைத்து பாத்திரங்களும் சோகத்தை சுமந்து வருகின்றன குறிப்பாக ராமன் சீதையை நினைத்து உருகுவதும் சீதை ராமனின் ஒவ்வொரு செயலிலும் சோகத்தை நினைத்து பேசுவதும் இயல்பாகவும் இருவரின் நிலையையும் வெளிப்படுத்துகின்றன.
முதல் அங்கம்இராம பட்டாபிஷேகம் முடிந்த நிலையில் துவங்குகிறது ரிஷய சிங்கர் தொடர்ந்து 12 ஆண்டுகள் செய்யப்போகும் பெரும் யாகத்திற்கு அழைப்பு வந்ததால் (தசரதனுக்கு சாந்தா என்ற மகள் பிறந்ததாகவும் அவளை விபண்டக மகரிஷியும் பெண்ணாக பெற்று வளர்த்து விசேஷங்களுக்கு மண முடித்து வைத்ததாகவும் பவபூதி உத்தரத்தில் சொல்கிறார்) மருமகனின் யாகத்திற்கு மூன்று தேவியர் உட்பட இராமன் சீதை லட்சுமணன் தவிர அனைவரும் சென்று விடுகிறார்கள்.
நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவளின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்ற ராமன் நினைக்கிறான். ராமகாதையை சித்திரமாக வரையும் பணி முடிந்து பார்வையிட தயாராக இருப்பதாக லக்ஷ்மணன் தெரிவிக்க, மூவரும் ராமனின் வாழ்க்கை வரலாற்றை பார்க்கச் செல்கிறார்கள்.
ஒவ்வொரு சித்திரத்தையும் விளக்கும் முறையில் ராம பட்டாபிஷேகம் வரை நடந்த முந்திய கதை சொல்லப்படுகிறது .
ஜனஸ் தானத்தில் இருந்து இருந்த பகுதிகளை பார்த்த சீதை மீண்டும் அங்கு சென்று ரிஷிகளும் ரிஷிபத்தினிகளோடும் வாழவேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்துகிறார் .சீதையின் ஆசையை நிறைவேற்ற உடனே செயல்படும்படி லட்சுமணனிடம் கூறும் ராமன் தானும் உடன் இருப்பதாக கூறி மஞ்சத்திற்கு அழைத்துச் செல்கிறான்.
சீதை நன்கு உறங்கிக் கொண்டிருக்கும்போது ராமனின் அந்தரங்க பணியாளன் துர்முகன் ராமனைக் காண வருகிறான். வந்தவன் ராமன் அனுமதிக்க சீதையைப் பற்றி மக்கள் சிலர் அவதூறு பேசுவதாக கூறுகிறான். சீதையோடு இணைந்து அளவிலா ஆனந்தத்துடன் வாழ நினைத்த ராமன் பெரும் அதிர்ச்சி கொள்கிறான்.
சூரியகுல அரசர்களின் பெருமையை எண்ணி மக்கள் நலனும் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவது மே அரசனின் முதல் கடமை என்று எண்ணி மிகுந்த சோகத்தோடு சீதையை காட்டிற்கு அனுப்ப முடிவு செய்து அரசகட்டளை எனக்கூறி லட்சுமணனையும் ஏற்கச் செய்து செயல் படுத்துகிறான்.
இரண்டாவது அங்கம் துவங்கும் போது சீதை காட்டிற்குச் சென்று 12 ஆண்டுகள் முடிவடைந்து விடுகிறது அஸ்வமேத யாகம் செய்ய முனையும் போது ராமனுக்கு பிராமணரின் புத்திரனை காக்க வேண்டிய அவசியத்தால் பஞ்சவடிக்கு இராமன் வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பஞ்சவடிக்கு வந்த ராமன், முன்பு சீதையோடு சுற்றிய இடங்களைப் பார்த்து மிகுந்த சோகம் கொண்டு சீதையை எண்ணி புலம்ப துவங்குகிறான்.
மூன்றாவது அங்கத்தில் ராமன் உலவும் பகுதிக்கு சீதையும் வருகிறாள். காரணம் 12 வயதான புதல்வர்களுக்கு செய்ய வேண்டிய சம்ஸ்காரம் ஒன்றைச் செய்வதற்காக அப்போது ராமனைக் கண்டு பெரிதும் வருந்துகிறாள். அவள் அருகில் இருந்தாலும் ராமனால் அறிய முடியாத நிலை சீதையின் நினைவால் மயங்கும் ராமன் சீதையின் பரிசம் உயிர்ப்பிக்கிறது. ஒருவாறு தெளிவு பெற்ற ராமன் அயோத்தி திரும்ப புஷ்பக விமானத்தில் ஏறுகிறார்.
நான்காவது அங்கத்தில் ஜனகர் கௌசல்யை சந்திப்புகள் நிகழ்கின்றன.ஜனகர் மிகுந்த கோபம் கொள்வதும் சீதையை எண்ணி வருந்துவதும் தந்தையின் சோகத்தை காட்டுவனவாக அமைந்துள்ளன.
ஐந்தாவது அங்கத்தில் லட்சுமணன் சந்திரன் கேதுவுடன் போர் செய்யும் நிகழ்வுகள் வருகின்றன, யாகத்திற்காக அனுப்பப்பட்ட குதிரையை லவன் பிடிப்பதால் ஏற்பட்ட வாக்குவாதம் போராக மாறுகிறது. லவன் ஜிரும்பகாஸ்ரத்தை ஏவ அனைவரும் மயக்கம் அடைகிறார்கள். லவனும் சந்திரக் கேதுவும் போர் செய்வதை ஆகாய மார்க்கத்தில் இருந்து பார்க்கும் ராமன் போரை நிறுத்த இருவருக்கும் மத்தியில் இறங்குகிறான்.
ஆறாவது அத்தியாயம் இருவரின் மத்தியில் இறங்கும் ராமனின் பேச்சினாலும் அங்க அடையாளங்களையும் கண்டு அவனிடம் அதிக அன்போடு பேசுகிறான். சீதாவின் சாயல் தெரிகிறது என்றும் நம் பரம்பரையினர் மட்டுமே அறிந்த ரகசியம் இவன் எப்படி அறிந்தான் என்றும் எண்ணிக் கொண்டிருக்கும் போது சிறுவர்களின் போரை கேள்விப்பட்ட ரிஷிகளும் ஆசிரமவாசிகளும் வருகிறார்கள். அவர்களுடன் ஜனகரும் கௌசல்யையும் வருகிறார்கள். பரஸ்பர விசாரித்தலுக்கு பின் வால்மீகி எழுதிய ராமாயணம் நாடகத்தைக் காண ஆசிரமத்திற்கு செல்கிறார்கள்.
ஏழாவது அங்கத்தில் சீதையைத் தவிர மற்ற பாத்திரங்களில் தேவதைகள் நடிக்க நாடகம் துவங்குகிறது. இங்கும் பெரும் சோகம் கொள்கிறான் ராமன் . நாடக முடிவில் சீதை மீண்டும் அக்னி பிரவேசம் செய்ய வேண்டிய சூழலில் அயோத்தியில் இருந்து வந்த மக்கள் சீதை மேல் களங்கமில்லை அவள் உத்தமி என்கிறார்கள். மக்கள் தெளிவு பெற்ற நிலையில் ராமன் முனிவர்கள் முன்னிலையில் சீதையை ஏற்றுக் கொள்கிறான். நாடகம் நிறைவுபெறுகிறது .பவபூதியின் உத்தர ராமசரிதம் சோகரஸம் மிகுந்தது. உத்தர ராம சரிதத்தில் உள்ள ஸ்லோகங்கள் அர்த்த விசேஷத்தால் அறிஞர்களாலும் மிகுந்த பாராட்டு பெற்றவை.
லௌகிகானாம்ஹி ஸாதுனாம் அர்த்தம் வா கனுவர்த்ததே ரிஷி நாம் புனராத்யானாம் வாசம் அர்தோனு தவதி !!
பொதுவான மனிதர்களின் சொற்கள் அவர்கள் அறிந்த அர்த்தத்தை சொல்வதாக இருக்கும் .ஆனால் ரிஷிகளின் சொற்கள் அவர்கள் வாக்கினால் வெளிப்பட்ட பின் புதிய அர்த்தங்களை உற்பத்தி செய்வனவாக விளங்குகின்றன.
கிமபி கிமபி மந்தம் மந்தம் அசத்தி யோகாத் அவரளித கபோலம் ஜல்பதோ ஏக்ரமேண அசிதில பரிரம்ப வியாபூதைக யேக தோஷ்னோ அவே திதி கதயா மா ராத்ரிரேவ வ்ரம்ஸீத்
ராமனும் சீதையும் தனஸ்தானத்தில் தனிக்குடிலில் ஒரு இரவில் பேசியும் விளையாடி மகிழ்ந்த நேரம் போவதே தெரியாமல் இன்ப உலகில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் .இரவுதான் முடிந்ததே தவிர அவர்களின் பேச்சும் மகிழ்ச்சியும் அன்று முடியாமல் தொடர்ந்தது.
வஜ்ரா தபி காடோராணி ம்ருதுனி குஸீ மாதபி லோகோத்ரானாம் சேதாம்ஸி கோபு விட்டாலும் அர்ஹதி
இராமன் சீதையின் நினைவால் புலம்புவதையும் மயங்கி விழுவதும் கண்டு ராமனின் மனதை எப்படிப்பட்டது என்பதை வனதேவதை யின் வாக்காக பவபூதி சொல்கிறார். ராமனின் மனதில் ராஜ விஷயத்தில் வஜ்ரம் போன்ற கடுமையான மனத்துடன் முடிவு எடுக்கக் கூடியது. அன்பு என்றால் அது மலரைவிட மென்மையான தன்மை கொண்டது என்கிறார். பவபூதிக்கு கருணா ரஸமே மிகவும் பிடித்தது. அதனாலேயே தனது மூன்று நாடகங்களிலும் கருணாரசத்தை பிரதான படுத்தினார். அதை மேலும் உறுதிப்படுத்த தமாலா என்னும் நதியின் வாக்காக சொல்கிறார்.
ஏகோ ரச கருணயேவ நிமித்த பேதாத் பின்ன ப்ருதக் ப்ருதக் இவாஸ்ரயதே விவர்த்தான் ஆவர்த்த புத்புத தர்க்க மாயா விகாராந் அம்போயதா ஸலிலமேதது தத்ஸமக்ரம்
நாம் வெவ்வேறு விதமான எத்தனை உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாலும் அவை யாவற்றிற்கும் கருணாரஸமே அடிநாதம் ஆகும். எப்படி எனில் அலை கழல் நுரை என எவ்வளவு பெயரிட்டு அழைத்தாலும் அவை அனைத்திற்கும் ஒரே பெயர்அனைத்திற்கும் ஒரே பெயர் கடல் என்பதுதானே! அதுபோல என்கிறார். சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பியது எண்ணி மிகவும் வருந்தி வெறுத்துப் பேசும்போது அருந்ததி ஆறுதல் கூறும் விதமாக கூறும் சொற்கள் பிராமணர்களின் வாக்கு பொய்யாகாது நிச்சயம் நடைபெறக் கூடியது எனக் கூறுகிறார்.
ஆவிர் பூத ஜ்யோதிஷாம் பிராமண நாம் யே வியாஹ ரா : தேஷீ மாசம் சயோஸ்பூத் பத்ராஹ்யேஷாம் வாகி லக்ஷ்மீர் நிஷிக்தா நைதே வாசம் விப்லு தார்த்தம் வதந்தி!
உண்மை உணர்ந்து பேசும் பிராமணர்களின் சொற்களில் ஐயம் கொள்ளக்கூடாது அவர்களின் வாக்கில் லட்சுமி குடியிருக்கிறாள் அதனால் அச்சொல்லில் அமைதியும் ஆனந்தமும் விலையும் அவர்கள் வாக்குப் பொய்யாவதில்லை என்கிறார்.
கமான் துக்தே விப்ர ஹர்ஷத் ய லக்ஷ்மீம் கீர்த்தி சீ தே துஜ்க்ருதம் யாஷிநஸ்தி தாம் சாப்யேதாம் மாதரம் மங்களானாம் தேனும் தீரா: ஸீந்ருதாம் வாசமாஹீ :
அன்பான மொழி என்பது காமதேனு போன்றது அது நாம் விரும்பிய அனைத்தையும் அளிக்கவல்லது அம்மொழியானது செல்வத்தை தரும் புகழைத் தரும் தீயவற்றை அழிக்கும் பாவத்தைப் போக்கும். அதனால் அன்பான பணிவான சொல்லையே புலவர்கள் எப்போதும் விரும்புவார்கள் என்று லவன் வாக்காக பவபூதி சொல்கிறார். நாமும் இனிய சொற்களைப் பேசி படித்து வாழ்வில் பண்படுவோம்.