பாரதீய கலாசார இலக்கியங்களின் வழியே மேலாண்மை: இரு நூல்கள்!

இலக்கியம் நூலரங்கம்
book management jaganathan
book management jaganathan

~ டி.எஸ். வெங்கடேசன்

ராமாயணம், மகாபாராதம், பகவத் கீதா , பஞ்சதந்திர கதைகள் போன்றவை எப்படி இன்றைய காப்பரேட் நிறுவன பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது என்பதை விளக்கும் புதிய புத்தகம்தான் கிராண்ட்மா இன்தி போர்டு ரூம் (நிறுவன விவாத அறையில் பாட்டி).

நூலாசிரியர் தி ஜெகன்னாதன் கம்யூட்டர் பொறியாளர். இரு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் கடந்தாண்டு மேனேஜ்மெண்ட் இம்மொமோரியல் – லேர்னிங் பிரெம் லிட்ரெட்ச்சர்( மேலாண் நிர்வாகம் அழிவற்றது – இலக்கியங்கள் தரும் பாடங்கள்) என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது குறித்து நமது செய்தியாளரிடம் அவர் கூறுகையில், எனது முதல் புத்தகம் கடந்தாண்டு வெளிபிடப்பட்டது. நான் சிறுவயது முதல் இதிகாசங்கள்,பகவத் கீதா போன்றவற்றை படிக்க தொடங்கினேன். நண்பர்கள், சக பணியாளர்களுடன் பேசும் போது மேற்கோள் காட்டுவேன்.

அதை தவிர வாரம் மண்டே மியூசிங் என்ற தலைப்பில் நண்பர்கள், ஊழியர்கள், இத்துறையினருடன் சமுக வலை தளங்கள் மூலம் 25 வாரங்கள் வரை பகிர்ந்து வந்தேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதை புத்தகமாக கொண்டுவரவேண்டும் என அவர்கள் விரும்பினர். இப்படிதான் முதல் புத்தகம் வெளிவந்தது” என்கிறார்.

book grandmain board room
book grandmain board room

“இரண்டாவது புத்தகத்தை சம்பத் குமாருடன் இணைந்து எழுதியுள்ளேன். இது கடந்த வாரம் வெளியானது. எமர்ஜ்புரோ என்ற நிறுவன சந்திக்கும் பிரச்னைகளுக்கு ராமாயண, மகாபாரத, பகவத் கீதா, பஞ்சதந்திர கதைகளில் இருந்து தீர்வுகளை பாடமாக கொண்டு மீண்டு வருவதுதான் கதை சுருக்கம்.

இந்த புத்தகம் நிர்வாக மேலாண்மை இயல் மாணவர்களுக்கு, உயரதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்”என்கிறார் ஜெகன். கதைகளம் ஊழியர்களின் கெட்- டூகெதருடன் ( ஊழியர்கள் சந்திப்புடன்) தொடங்குகிறது. விறுவிறுப்பாக கதை செல்வது படிப்போரை கவரும்.

இந்த இரு புத்தகங்களும் பிளிப்கார்ட், அமோசன் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள், நோஷன் பிரஸ் ஆன்லைன் ஸ்டோர் போன்றவற்றில் கிடைக்கும். https://www.amazon.in/Grandma-Board-Room-Jaganathan-T/dp/1638327777 மற்றும் https://notionpress.com/read/grandma-in-the-board-room.

316 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ.349 ஆகும். 25 சதவீத அறிமுக சலுகையும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.