
கலைமகள் மாத இதழின் 1100 ஆவது இதழை தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி இன்று வெளியிட்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலைமகள் இதழின் 1100 ஆவது இதழையும், கலைமகள் இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் நூலையும் அவர் வெளியிட்டுப் பேசினார்.
தமிழக ஆளுநர் மாளிகையில் கலைமகள் மாத இதழின் 1100 ஆவது இதழும் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் எழுதியுள்ள ” சுதந்திரமும் முத்தமிழும் ” என்கிற நூலும் சனிக்கிழமைஇன்று முற்பகல் 11 மணியளவில் தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்டது.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆளுநர் ரவி, கடந்த 92 ஆண்டுகளாக தமிழ் மொழி, கலாசாரம், சிந்தனைகள் & பாரதியத்தை செழுமைப்படுத்த ‘கலைமகள்’ தமிழ் மாத இதழ் வழங்கிய பங்களிப்புகளை ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டினார். ‘சுதந்திர போராட்டத்திற்கு முத்தமிழ் ஆற்றிய பங்களிப்பு’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்… என்று குறிப்பிடப்பட்டிருந்தது.