அழகான சிறிய கூடு அதில் அம்மா குருவி இட்ட முட்டை பாதுகாப்பாய் இருந்தது விரியப் போகுது இதோ… இதோ… பட்டுக் குஞ்சு தன் ரோஜா வாய் திறக்கும் திராட்சைக் கண்கள் திறக்கும்! குட்டிக் குட்டி கை, கால்கள் அசைக்கும் இதோ… இதோ… உழைப்பைப் பகிரும் மகிழ்ச்சிக் குதூகலம் அன்பைப் பன்மடங்காக்கும் அனுபவிக்கவும் தூண்டும் இதோ……. இதோ……. சோர்வு போகும் தொலைவில் சோகம் போகும் விரைவில்… வாழ்வுக்கு ஓர் அர்த்தம் உழைப்புக்கு ஓர் உற்சாகம் இதோ….. இதோ… புதிய அனுபவங்கள்… பூரிக்க வைக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் மேன்மைபெற வைக்கும் இதோ…… இதோ……. கவிதை: மஞ்சுளா மூர்த்தி
இதோ விரிகிறது ஒரு கவிதை!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari