முத்தமிழ் அரசி!

saraswathi ramanathan - 2026

முத்தமிழ் அரசி – சரஸ்வதி இராமநாதன்

-ஜெயஸ்ரீ எம். சாரி

என் பள்ளி நாட்களில் மயிலாடுதுறையில் முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் சொற்பொழிவுகளை கேட்கும் பாக்கியமானது எனக்கு இருந்தது. கம்பராமாயணத்தை அவருடைய சொல்நடையில் கேட்கும் போது தேனாகவே இன்றும் இனிக்கும்.

அவர் தன்னுடைய அருமையான சொல்லாற்றலால் கம்பராமாயணத்தில் கோசலை நாட்டு வளத்தைப் பற்றி குறிப்பிட்டார். அப்போது கம்பராமாயணப் பாடல் மூலமாக எருமை மாடு பால் சுரந்ததை அழகாக வர்ணித்தார்.

“சேலுண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சை தேரை தாலாட்டும் பண்ணை”- இது தான் அந்தப் பாடல்.

அன்னப்பறவையானது பண்ணையில் உள்ள தாமரை மலராகிய படுக்கையில் தன் குஞ்சை உறங்க வைத்தது. நீரிலே கிடக்கும் எருமை தன் கன்றை நினைத்துச் சொரிந்த பாலை அந்த அன்னக் குஞ்சு பருகுகின்றது. பின்னர் தேரைகள் தாலாட்ட அவை உறங்கின. இந்தக் காட்சியை அப்படியே எங்கள் கண்முன்னே அவர் கொண்டு வந்து விடுவார்.

வருடங்கள் உருண்டோடி என்னுடைய கல்லூரி நாட்களில் அவரை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னுடைய தந்தையார் இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரிந்ததால் கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரன் சுவாமி கோயிலில் முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியின் அழைப்பிதழ் எங்களுக்கு வந்தது. நானும், என் தந்தையாரும் அந்நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். அங்கு, முத்தமிழ் அரசியான சரஸ்வதி இராமநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் பாக்கியம் எனக்கு தரப்பட்டது. அப்போது, சில நொடிகள் அவருடன் எனக்கு பேச முடிந்தது.

காலச்சக்கரம் சுழலச்சுழல 29 ஆண்டுகள் சென்றன. சமீபத்தில் சென்னையில் மேற்கு முகப்பேரில் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கருத்தும் கானமும் இணைந்த நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக ‘காலமெல்லாம் கண்ணதாசன் – 5’ எனும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்ததும் நானும், என் தந்தையாரும் சென்றோம்.

நம் உரத்த சிந்தனை மாத இதழின் ஆசிரியர் உதயம் ராம் அவர்கள் எங்களை முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்களுக்கு “உங்களோட ரசிகர்களாம், இவர்கள்,” என்று அறிமுகப்படுத்தினார். பின்னர், நாங்கள் எங்களின் மலரும் நினைவுகளை அவருடன் பகிர்ந்துக் கொண்டோம். சப்தமே இல்லாமல் பல மாணவர்களுக்கு அவர் செய்யும் கல்வி உதவியும் அன்று தான் எனக்கு தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவருடன் உரையாடியது எனக்கு மறக்க முடியாத தருணமாய் இருந்தது.

இசைச்சுடர் முனைவர் லலிதா மோகனின் இனிமையான குரலில் கவியரசு கண்ணதான் இயற்றியவற்றில் நவராத்திரி சிறப்பாக ஒன்பது பாடல்களான ‘நவராத்திரி சிவராத்திரி, யார் தருவார் இந்த அரியாசனம், சொல்லடி அபிராமி,
சரவண பொய்கையில், நான் ஆட்சி செய்து வரும், ராமன் எத்தனை ராமனடி மருதமலை மாமுனியே, கோமாதா, குலமாதா மற்றும் சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே,’ பாடல்களைப் பாடினார். மேலே குறிப்பிட்ட அனைத்துப் பாடல்களுக்கும் முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில், தன் சொல்லாற்றலில் தன்னுடைய இனிய அனுபவங்களையும் அழகாய் கோர்த்து ஒரு சொல்மாலையையே தொடுத்து விட்டார். அகவை என்பது ஒரு எண்ணிக்கை தான் என அவர் நிரூபித்து விட்டார்.

அவருக்கு தமிழ் மொழியின் மேல் உள்ள பெருமையும், கவியரசு கண்ணதான் பற்றிய மிகுந்த மரியாதையும் அவரை இந்த வயதிலும் இளமையாகவும், செயலாற்றத்துடனும் வைத்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

கனிந்த அகவையிலும் அவருடைய கனிவான குரலாலும், சிரித்த முகத்தாலும், மேடையை தன்னுடைய ஆளுமைப் பண்பால் ஆளும் விதத்திலும், நேர்த்தியான உடை அலங்காரத்தாலும் அனைத்து தலைமுறைக்கும் அவர் ஒரு உத்வேகம் கொடுக்கும் ஒரு மாமனிதர் என்று சொன்னால் அது மிகையாகாது.

முனைவர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய சில தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories