
தேர்ச்சியடந்த மாணவர்களுக்கு ‘ராஷ்டிரபாஷா ரத்ன’ மற்றும் ‘ராஷ்டிரபாஷா ஆச்சாரிய’ பட்டங்கள் வழங்கப்பட்டன
– செய்தித் தொகுப்பு: ஜெயஸ்ரீ எம். சாரி
புதிய கல்விக் கொள்கை 2020 அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக நாட்டின் தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழியில் கல்வி கற்பிக்க வலு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இந்திய மொழிகளிலேயே கல்வியானது கற்பிக்கப்படும் என்று அறியப்படுகிறது.
இந்தியா ஒரு பல மொழிகள் பேசும் நாடாக விளங்குகிறது. ஆனால் இதனையே முன்பெல்லாம் ஒரு குறைபாடாக பார்க்கப்பட்டது. அப்பொழுதெல்லாம் மொழிகளை இணக்கும் பணியை செய்யும் ரஷ்டிரபாஷா பிரசார் சமிதி முதலிய அமைப்புகள் பற்றி அறிய முடிந்தது. நாடானது பல மொழிகள் பேசும் பூமியாக இருந்தாலும் மக்களிடையே தொடர்பானது அவர்கள் அறியும் ஒரு குறிப்பிட்ட மொழியினால் முடிகிறது.
தேசிய கல்விக் கொள்கையானது மக்களை சுதந்திரத்தோடும், சுயமாக சிந்தித்தும், தம் சொந்தக்காலில் நிற்கவும் மாணவர்களுக்கு உதவி புரியுமாறு உள்ளது,” என்று வர்தாவில் இயங்கும் மகாத்மா காந்தி அந்தர்ராஷ்ட்ரீய ஹிந்தி விஷ்வ வித்யாலயாவின் துணைவேந்தரும், சுக்ல பட்டமளிப்பு விழாவின் முக்கிய விருந்தினருமான ப்ரொஃபஸர் ரஜனீஷ் குமார் ஷுக்ல கூறினார்.

அவர் வர்தாவில் இருந்து இயங்கி வரும் ராஷ்ட்ரபாஷா பிரசார் சமிதியின் 33-வது அகில இந்திய பட்டமளிப்பு விழாவில் பட்டமளிப்பு உரையை நிகழ்த்தும்போது கூறினார். அவர் மேலும் கூறுகையில் தேசிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு ரஷ்டிரபாஷா பிரசார் சமிதி தனது அடிப்படை கொள்கைகளை மறு மதிப்பீடு செய்தாக வேண்டும்.
நாட்டின் சுதந்திரத்துடன் கண்ட கனவுகளை நினைவாக்க மற்ற மொழிகளையும் இணைத்துக்கொண்டு ஹிந்தி வழியாக அதற்குரிய வேலைகளை செய்ய வேண்டும் என்றார். ப்ரொஃபஸர் சூரிய பிரசாத் தீக்ஷித், தலைவர், ரஷ்டிரபாஷா பிரசார் சமிதி, தன்னுடைய உரையில் ‘ மாணவர்களுக்கு கல்வி கற்ற பின் தரப்படுவது பட்டம். அது புகழ்பெற்ற ஒரு சிறப்பு அங்கீகாரமாக உள்ளது. பட்டம் பெறுவது என்பது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் ஆகும்,” என்றார்.
டாக்டர் ஹேமச்சந்திர வைத்ய, பிரதான் மந்திரி, ரஷ்டிரபாஷ பிரசார் சமிதி, மகேஷ் அகர்வால், ஜெகதீஷ் பிரசாத் போதார் மற்றும் பிரகாஷ் பாபலே ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர். சங்கீதா வாக், ஜெயஸ்ரீ பதக்கி மற்றும் ரூபாலி ஸ்வயம்கார் ஆகியோர் ‘பாரத் ஜனனி ஏக் ஹ்ருதய்’ என்ற பாடலை பாடினர்.
டாக்டர் வைத்ய தன்னுடைய உரையில் பட்டமளிப்பு விழா என்பது மாணவர்களுக்கு ஒரு இன்றியமையாத தருணம் என்றார்.
ப்ரொஃபஸர் ஷூக்ல அவர்கள் மாணவர்களை பட்டமளிப்பு உறுதிமொழியை வாசிக்க செய்தார். பரிக்ஷா மந்திரி பிரகாஷ் பாப்லே, 2017, 2018 மற்றும் 2019 -ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களை அறிமுகப்படுத்தினார். துணைவேந்தர் சுக்ல அனைத்து தேர்வானவர்களுக்கும் பட்டங்களை வழங்கி கௌரவித்தார். வர்தா மையத்தில் இருந்து தேர்வுப் பெற்ற மாணவிகளான அபேக்க்ஷா தேஷ்முக் மற்றும் பேலா டிப்டெவால் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பட்டப்படிப்பை முடித்த அனைத்து மாணவர்களுக்கும் ‘ராஷ்டிரபாஷா ரத்ன’ மற்றும் ‘ராஷ்டிரபாஷா ஆச்சாரிய’ பட்டங்கள் வழங்கப்பட்டன. சஞ்சய் பாலிவால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மகேஷ் அகர்வால் நன்றியுரை ஆற்றினார் .நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் முடிவடைந்தது.




