
சிவபிரதோஷம்
“வாழியே வாழியே தேவா”
(மீ.விசுவநாதன்)
வான்வெளி மண்டலம் எல்லாம் – சிவ
மந்திரம் ஓதிடக் கேட்டேன்
கூன்பிறைச் சந்திர உச்சி – சிவக்
கொழுந்தெனக் கூப்பியே நின்றேன்
ஆழிதன் பேரலைக் காட்சி – சிவ
ஆழமாம் கூத்தெனக் கண்டேன்
வாழியே வாழியே தேவா – மன
மடமையைப் போக்கிட வாவா
பற்றெனும் கூட்டிலே சிக்கி – நான்
படுகிறேன் தறிபடும் பாடு
கற்றவன் என்கிற கர்வம் – தினம்
கடிதெனைத் தின்னுதே பாரு
நெற்றியுன் கண்ணினைக் காட்டி – என்
நெஞ்சமா மாசினை நீக்கு
ஒற்றையாய் நானுனைக் கொஞ்சம் – அன்பு
ஒளியினால் எண்ணிட வேண்டும்.
(இன்று (12.12.2020 ) சனிப் பிரதோஷம்)