காதல்- அரசியலைப்போல் சூதாட்ட மயமானது… அனுபவசாலி ஒருவர் அவிழ்த்துவிட்டுப் போனார்… ஏன்? என்றேன்! காதலிக்கும் இருவருமே ஒருவருக்கு ஒருவர் அலுக்காமல் சலிக்காமல் பொய்களை அவிழ்த்து விடுவார்களாம்! ஏமாற்றிக் கொள்வதில் சளைக்காமல் ஒருவரை ஒருவர் விஞ்சி விடுவார்களாம்! எச்சரிக்கை மணி என்று எனக்குள் அடித்துவிட்டுப் போனார்! எனக்கென்ன கவலை என்று இறுமாப்போடு உதறிவிட்டேன்! நீ என்ன…? என்னை ஏமாற்றவா போகிறாய்? அந்த நம்பிக்கையைத் தான் எப்போதோ கைவிட்டேனே! நான் மாற்றத்தை விரும்பினேன்… ஏமாற்றத்தை அல்ல! உன் காதல் உன்னை ஏமாற்றினும் என் காதல் என்னை ஏமாற்றாது! ஒற்றை ஆளாய் உன்னையே காதலித்த எனக்கு… காதல் மட்டுமே நிரந்தரம்! கனவு காட்டுமே சுதந்திரம்! நனவோ வாட்டுமே நிதம்நிதம்!
காதல் மட்டுமே நிரந்தரம் !
Popular Categories


