உன்னை நான் விரும்பத் தொடங்கினேன்! எப்படியோ என் உள்ளம் புகுந்து என்னை அடிமை கொண்டாய்! தப்படி … இது என் தவிப்படி! பெண் மட்டும்தான் கருவைச் சுமப்பாள்? உலகம் சொல்லி வைக்கும்! பெண் மட்டும்தான் உயிரைச் சுமப்பாள்! உலகம் சொல்லி வைக்கும்! ஆனால்.. என் இதயத்தைக் கேட்டுப் பார்! உன் நினைவுக் கருவை நான் சுமக்கிறேன்! உன் உயிர் மூச்சை என்னில் சுமக்கிறேன்! சொல்லத்தான் மனம் துள்ளும் சொல்லவே ஆசை கொள்ளும்! அழகிற் சிவந்த முகம் காண அருகில் வந்தால்… கோபத்தில் சிவந்த முகம் கண்டு கோணித்தான் போகிறேன்! இனி ஓர் உலகம் இல்லை என எனக்குத் தந்தவள் நீ! தனி ஒளி இளமை காட்டி எனைத் தவிக்க வைத்தவள் நீ! அழகாகப் பின்னலிட்டு அங்குமிங்கும் ஆடும் ஜடை இடதும் வலதுமாய்ச் சுற்றி நீ காட்டும் கண்களின் ஜாடை அட… உன்னையே யோசித்து யோசித்து… என் முடி மட்டும் கொட்டவில்லை! கவிதையும்தான்! காற்றில் சாய்ந்தாடும் உன் கூந்தலில் கவலையிற் தோய்ந்த முகம் புதைத்து சோகம் மறக்கத்தான் ஆசை! குளிர் அதர இதழ் பதித்து உதிரச் சூட்டை உருக்குலைக்கத்தான் உள்ளத்தில் எழுந்த ஆசை! பின்னலெனும் சன்னல் விலக்கி உன் சங்குக் கழுத்தில் என் விரல் நர்த்தனம் புரியத்தான் ஆசை! துடிக்கும் ஆசைகள் ஆயிரம்தான்! ஆனால்… உன் உள்ளத்தின் விலாசம் தேடி இத்தனை நாள் அலைந்தும் காலம் கனியவில்லை! முகவரி தொலைந்து முதல்படியில் நிற்கின்றேன்! உன்னை நான் விரும்பக் கற்கவில்லை… இயல்பாய்ப் பூத்தது அது! ஆனால்… வெறுக்கக் கற்கவேண்டும்! முயற்சி செய்கின்றேன்… முடியவில்லை! என் பாசத்துக்குரியவர்களை என்னில் இருந்து பிரித்துவிடுகிறான் இறைவன்! என் தனிமை வரம் அப்படி! நீ நலமாய் வாழ என் பாசக் கருவூலத்துக்கு வெறுப்புப் பூட்டு போட வேண்டும்! உன்னை நான் வெறுக்கத் தொடங்குகிறேன்!
உன் மீதான என் விருப்பும் வெறுப்பும்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories