December 6, 2025, 4:52 AM
24.9 C
Chennai

நல்லத கெடுக்க ஒருத்தரிருந்தா உதவ ஆயிரம் பேர் இருப்பாங்க !

eagle - 2025கழுகு ஒன்று மேகத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. எல்லா மேகங்களும் காற்றின் வேகத்துக்கு ஏற்றபடி நகர்ந்து கொண்டிருக்க, ஒரே ஒரு திரள் மேகம் மட்டும் நகராமல் பிடிவாதமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.
கழுகு அந்த மேகத்துக்கு அருகே வந்து, ‘‘ஏன் நீ மட்டும் நகராமல் கஷ்டப்பட்டு காற்றை எதிர்த்து இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டது.

‘‘ஓர் உயிருக்கு ஆபத்து. அதனால் கலங்கிப் போய், அதைக் காப்பாற்ற இங்கேயே நிற்கிறேன்’’ என்றது.
‘‘யாருக்கு ஆபத்து? என்னிடம் சொல். நான் உனக்கு உதவி செய்கிறேன்’’ என்றது கழுகு.cloud - 2025கழுகை நம்பிய மேகம் விஷயத்தைச் சொன்னது. ‘‘கீழே தரைப்பகுதியில் எனக்கு நேரே ஒரு சிறு குளம் இருக்கிறது. அதில் நிறைய தாமரை மலர்கள் இருக்கின்றன. அதில் ஒரு இலை நடுவே சிறுதுளி நீர் இருக்கிறது.

அந்த நீரில் ஒரு மீன்குஞ்சு தெரியாமல் விழுந்து விட்டது. அது துள்ளி விளையாடும்போது தெரியாமல் அந்த தாமரை இலை சிறு துளி நீரில் விழுந்து விட்டது. அதற்கு எப்படி மீண்டும் குளத்துக்குள் போவது என்று தெரியவில்லை.

அதன் அம்மா மீனோ, குஞ்சு மீனைக் காணோம் என்று கலங்கி வெளியே வெளியே எட்டிப் பார்க்கிறது. சூரிய வெளிச்சம் பட்டால் தாமரை இலையில் உள்ள சிறிதளவு சூடாகி குஞ்சு மீன் உயிருக்கு ஆபத்தாகிவிடும். அதனால்தான் நான் சூரிய ஒளியை மறைத்துக் கொண்டு நிற்கிறேன்’’ என்றது.

இதைக் கேட்ட கழுகின் புத்தி மாறியது. ‘‘நான் பெரிய மீன் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை குஞ்சு மீன் சாப்பிட்டதில்லை. நல்லவேளை, விஷயத்தைச் சொன்னாய்’’ என்றது.

மேகம் வேதனையடைந்தது. கோபமாக கழுகிடம், ‘‘நீ காப்பாற்றுவேன் என்று சொன்னதால்தான் நான் உண்மையைச் சொன்னேன். இப்போது நீ செய்வது அநியாயம், துரோகம்’’ என்று கத்தியது.

கழுகு அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் குஞ்சு மீனை சாப்பிட தாமரை இலையை நோக்கிப் போக ஆரம்பித்தது.
மேகத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குஞ்சு மீனைக் கொல்வதற்கு கழுகிடம் தானே யோசனை சொல்லிவிட்டோமோ என குற்ற உணர்வு அடைந்தது.

அதை உணர்ந்துகொண்ட காற்று சொன்னது. ‘‘மேகமே! நீ கழுகிடம் சொன்னதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் உனக்கு உதவி செய்கிறேன். கழுகு குஞ்சு மீன் அருகே போகும்போது நான் வேகமாக வீசுகிறேன். நீ சட்டென்று விலகிவிடு. நான் சொல்வதை மட்டும் செய்’’ என்றது.

மேகத்துக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும், காற்று சொன்னதைச் செய்ய நினைத்தது. கழுகு தாமரை இலையில் இருக்கும் குஞ்சு மீன் அருகே போகும்போது காற்றின் வேகத்தில் பட்டென்று விலகியது.

அது விலகியதும் சூரிய ஒளி பளீரென்று அந்த தாமரை நீரில் விழுந்தது. அந்த ஒளி கழுகின் கண்களை கூசச் செய்தது. திடீரென்று அத்தனை ஒளிக் கூச்சத்தை எதிர்பாராத கழுகு, தடுமாறி இலையில் விழுந்தது. விழுந்த நேரத்தில் காற்றும் வேகமாக வீச, தாமரை இலை அசைந்து, அதன் நடுவில் உள்ள நீரோடு குஞ்சு மீன் குளத்தில் விழுந்தது.

அப்போது கழுகின் காதருகே பேசிய காற்று, ‘‘நல்ல விஷயத்தைக் கெடுக்க ஒருவர் வந்தால், உதவி செய்ய ஆயிரம் பேர் வருவார்கள்’’ என்றது. கழுகு தலைகுனிந்து நிற்கும்போது, அங்கே தாய் மீன் குஞ்சு மீனோடு நீந்தி நீந்தி பாதுகாப்பான இடத்தை அடைந்தது. மேகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories