புதுக்கோட்டை அருகே மீமிசலில் இந்து முன்னணி விநாயகர் சிலை பிரதிஷ்டை

உள்ளூர் செய்திகள் திருச்சி

புதுக்கோட்டை அருகே மீமிசலில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
புதுக்கோட்டை அருகே மீமிசலில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தது.தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆவுடையார்கோயில் மணமேல்குடியை சேர்ந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் வரும் 8ந்தேதி திருப்புனவாசல் ராமகிருஷ்ண விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி செயலாளர் சுவாமி அக்ஷரானந்தா மகாராஜ் விஜர்சன ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கிவைக்கிறார்.ஏற்பாடுகளை இந்துமுன்னணி மாவட்ட பொதுசெயலாளர் நாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் சோனக்கருப்பன்,திருநாவுக்கரசு,கந்தசாமி,கிருபாகரன்,முத்துச்சாமி,பாஸ்கர்,முத்துகுமார்,பூபதி,ராஜா,ஜெகதீஸ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.மீமிசல் எஸ்பி மடம் செங்காலப்பிள்ளை மடத்தில் இரு;நது துவங்கும் ஊர்வலம் ஆர் புதூர் ரர்ஜகுமாராம்பாள்புரம் பகுதியில் நிறைவடைந்து கடலில் கரைக்கப்படும்.

4321 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.