இந்தியாவை அழிக்க… கால் கிலோவுல அணுகுண்டு நெறய்ய இருக்காம்! சொல்றாரு பாகிஸ்தானின் ‘அமைச்சர்’!

Published:

pakistan rail minister - 2026

இந்தியாவில் குறிப்பிட்ட இடத்தை அழிக்க எங்களிடம் 125 முதல் 250 கிராம் எடை வரையுள்ள அணுகுண்டுகள் உள்ளன என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் அஹ்மத் ரஷீத் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாஹிப் என்னுமிடத்தில் கட்டப்பட்டு வரும் ரயில்வே நிலையத்தைப் பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது…

இந்தியாவில் குறிப்பிட்ட எந்த ஓர் இடத்தையும் தாக்கி அழிக்கும் வகையில், 125 முதல் 250 கிராம் எடை வரையுள்ள அணுகுண்டுகள் உள்ளன.

இந்தியா இரண்டு மிகப்பெரிய தவறுகளைச் செய்துள்ளது. பாகிஸ்தான் இவ்வாறு செய்யாது என்று அதீத நம்பிக்கையில் அது அணுகுண்டு சோதனைகளை செய்தது… அது முதல் தவறு!

காஷ்மீர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்துடன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.. இது இரண்டாவது தவறு!

காந்தி மற்றும் நேருவின் சிந்தனைகளில் இருந்து மோடியின் சிந்தனைகள் முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன… என்று கூறினார் ரஷீத்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஏற்கெனவே விரக்தியின் விளிம்பில் உள்ள பாகிஸ்தான் வாய்க்கு வந்த படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறது. இம்ரான்கானின் அமைச்சரவை சகாவான ரஷீத்தும் இந்திய பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுமென்று பேசி வருகிறார். மோடிக்கும் அவர் மிரட்டல் விடுத்து வருகிறார்.

மைக் பிடித்துப் பேசிய போது, மோடியின் பெயரைச் சொல்லும் போதே ஷாக் அடித்ததும், அதை சமாளித்ததும் இவரது அனுபவம்தான்!

இத்தனைக் காலமாக இந்தியா இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறது. உலகம் அதை நீண்ட காலமாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசாங்கமே இப்போது வெளிப்படையாக இதனை ஒப்புக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் இராணுவமே நாட்டின், மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் முதலாளி என்பதை இப்போது இம்ரான் கானின் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது ஒப்புக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, தங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன என்றும், இந்தியாவுடனான “போர்” குறித்து பேசுவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

ALSO READ:  நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img