கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு! பதிலளிக்க உத்தரவு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
kanimozhi campaign van - 2026

தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். முழுமையான விவரங்கள் இல்லாத கனிமொழியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதம் என்று அந்தப் புகார் மனுவில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம், கனிமொழி ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வசந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், கனிமொழியின் கணவர் வருமானம் குறித்த தகவலை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. முழுமையான விவரங்கள் இல்லாத வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்ட விரோதம் என குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், தேர்தல் ஆணையம் மற்றும் கனிமொழி ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.