
திமுக வின் போராட்ட அறிவிப்பால் அமித்ஷா பின்வாங்கி இருப்பதாக திருச்சி விமான நிலையத்தில் திமுக வின் இளைஞரணி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ஒன்றியம் ஜெகதாபி, வேலாயுதம்பாளையத்தில் திமுக இளைஞரணி சார்பாக தூர்வாரப்பட்டுள்ள குளத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார் உதயநிதி.
இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி குளத்தை வேகமாக தூர்வாரியதற்காக மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜியையும், இளைஞரணி நிர்வாகிகளையும் பாராட்டினார்.

அதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தி மொழி விவகாரத்தில் திமுக பின்வாங்கவில்லை என்றும், திமுகவின் போராட்ட அறிவிப்பை அடுத்து அமித்ஷா தான் பின்வாங்கினார் எனவும் கூறினார். மேலும், இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி இனி வரும் காலத்தில் இந்தியை திணிக்க முயற்சித்தால் திமுக இளைஞரணி போராட தயாராக இருக்கிறது என தெரிவித்தார்.