குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் பானுப்ரியா மீது வழக்குப் பதிவு!

Published:

banupriya - 2026

தியாகராயநகர் விஜயராகவா சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார் நடிகை பானுப்பிரியா.

அவர் வீட்டில், ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம் பெத்தபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி வேலை செய்தார். பானுப்பிரியா வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம், ஐ-பேடு, கேமரா, இரு விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவை அண்மையில் திருடு போனது.

அவர் வீட்டில் வேலை செய்யும் அந்த சிறுமியும், அவரது தாயும் சேர்ந்து அந்த நகையை திருடியிருப்பது பானுப்பிரியா குடும்பத்தினருக்கு தெரியவந்தது. பானுப்பிரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன், சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அந்த சிறுமியும், தாயும் தங்கநகை மற்றும் பொருள்களை திருடியது தொடர்பாக புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த சிறுமியின் தாயிடம் விசாரணை செய்தனர். இறுதியில் அவரை போலீஸார் கைது செய்தனர்.

அதற்கு முன்பு அந்தச் சிறுமியின் தாயார், தனது மகளை பானுப்பிரியா குடும்பத்தினர் வன்கொடுமை செய்ததாக ஆந்திர மாநில காவல்துறையில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பானுப்பிரியா குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது வீட்டில் சிறுமியை பணிக்கு அமர்த்திய புகாரில் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related articles

Recent articles

spot_img