
தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதியன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படவிருக்கிறது. நாளை மாலை 6 மணியளவில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெறும் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நடிகை சரோஜா தேவி, நடிகை ராஜஸ்ரீ, ஏ.ஆர்.எஸ் மற்றும் ஒளிப்பதிவாளார் பாபு ஆகியோருக்கு டாக்டர்.சிவாஜி கணேசன் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
திரையுலகம் சார்பிலும் சென்னையில் நாளை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி திட்டமிடப்பட்டுள்ளன. இதில் திரையுலகத்தை சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில், தமிழகம் முழுவதும், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் / பொது இடத்தில், நடிகர் திலகத்தின் புகைப்படத்தை வைத்து மாலை அணிவிக்கப்பட்டும், ரத்ததானம், அன்னதானம், போன்ற சமூக நலப்பணிகளும் நடைபெறுகின்றன.
சென்னையில் 01-10-2019 செவ்வாய் காலை 8.30 மணிக்கு, சாந்தோமிலுள்ள காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் விடுதியில். நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது
நாளை காலை 9.30 மணிக்கு, நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு மற்றும் சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் K.சந்திரசேகரன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவிக்கிறார்கள்.



