
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக வரும் 18-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா, ஆந்திரா, உள் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.
சென்னை கோயம்பேடு, வேளச்சேரி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்தது பல இடங்களில் தாழ்வான இடங்களில் பகுதிகளில் மழைநீர் தேங்கியது இதனால் இன்று காலை பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள் அலுவலகம் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்



