
திருச்சி அருகே கனமழையால் நள்ளிரவு குளத்தில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கல்கண்டார் கோட்டை, விவேகானந்தா நகர் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக விவேகானந்தர் நகர் பகுதியில் உள்ள குளத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததது. இதனால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகினர்.

அப்பகுதியில் 100- க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.