
கடந்த 25ஆம் தேதி பிகில் திரைபடத்தின் சிறப்பு காட்சி வெளியாக தாமதமானதால் விஜய் ரசிகர்கள் கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் பொதுச் சொத்தை சேதம் செய்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 32 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சி.சி.டி.வி காட்சிகளை வைத்து 18 பேரை போலீசார் கைது செய்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முன்னதாக, படத்தின் விளம்பரத்துக்காக திட்டமிட்டு இந்த நிகழ்வு இருந்துள்ளதாக காவல்துறை உயரதிகாரி கூறியிருந்தார்.




