கொம்பன் தடை கோரி நெல்லையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: 31 பேர் கைது

puthiya-thamizhagam திருநெல்வேலி: கொம்பன் படத்துக்கு தடை கோரி, திருநெல்வேலியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 31 பேரை போலீஸார் கைது செய்தனர். கொம்பன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச்செயலர் நடராஜன் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு திரண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 31 பேரை கைதுசெய்தனர்.