தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்குகிறார் உள்துறை அமைச்சரும் பாஜக., தலைவருமான அமித்ஷா! வரும் 21ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா, போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார் என்று தகவல் வெளியானது.
ஒரு நாள் பயணமாக வரும் சென்னை வரும் அமித்ஷா ரஜினியை அரசியலில் இணைக்கும் புதிய திட்டத்துடன் வருவதாகக் கூறப் படுகிறது. இது குறித்து நிதின்கட்கரி மூலம் ரஜினிக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
ரஜினிகாந்த்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி – அமித்ஷா சந்திப்பு நடைபெறுகிறது என்றும், அப்போது ரஜினியின் அரசியல் நேரடி பயணத்திட்டம் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் கூறப் படுகிறது. இந்தப் புதிய திட்டத்திற்கு ரஜினி இசைவு தெரிவிப்பார் என்று பாஜக.,வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக., தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் 21 ம் தேதி தமிழகம் வரவுள்ள செய்தி இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது
தமிழகத்தில் பாஜக, தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், பாஜக.,வின் அரசியல் நடவடிக்கைகள் வேகமெடுத்தன. வேற்றுக் கட்சிகளில் இருந்து அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் பாஜகவில் பெருமளவில் இணைந்து வந்தனர் குறிப்பாக பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்த நடிகை குஷ்பு உள்பட சிலர் பாஜகவில் இணைந்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது
தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் வேல்முருகன் யாத்திரை ஒன்றை தொடங்கி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஆனால் இந்த யாத்திரைக்கு கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி மறுத்தது
எனினும் தமிழக அரசு விதித்த தடையை மீறி பல இடங்களில் வேல்யாத்திரை செல்ல பாஜக.,வினர் முயன்றனர். அதனால், கட்சித் தலைவர் எல்.முருகன் உள்பட கட்சி தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இத்தகைய சூழ்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகிறார் இவர் தொடர்ந்து சட்டசபை தேர்தலில் என்ன முடிவுகள் எடுக்க வேண்டும், பிரசார வியூகம் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தவுள்ளார்.