37வது மாவட்டமாக இன்று… உருவானது செங்கல்பட்டு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
chengalpet edappadi speech - 2026

தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டத்தை முறைப்படி இன்று தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் என 3 வருவாய் கோட்டங்கள் அடங்கியுள்ளன.

பெரிய மாவட்டமாக இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப் பட்டு, தமிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று உதயமானது.

இதை முன்னிட்டு, வேண்பாக்கம் கிராமத்தில் நடந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகப் பணிகளை முதல்வர் பழனிசாமி முறைப்படி தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்ட தொடக்க விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், வண்டலூர் (புதிது), திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்கள் செயல்பட உள்ளன.
மதுராந்தகம், தாம்பரம், செங்கல்பட்டு என 3 வருவாய் கோட்டங்களும் உள்ளன.
தாம்பரம், செங்கல்பட்டு, பல்லாவரம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் என 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.