நிலத்தகராறு இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம் திருச்சி புகார் பெட்டி
vettu 2 - 2026

கள்ளக்குறிச்சி கல்வராயன்மலையில் நிலத்தகராறில் இளைஞர் ஒருவரின் முகத்தில் மிளகாய் பொய் தூவி ஈட்டியால் குத்தி அவர் மீது பெட்ரேல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக உதயமாகியுள்ள கள்ளகுறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள மலையரசன்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்

மதியழகன். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதியழகன் குடும்பத்திற்கும் அதே ஊரைச்சேர்ந்த மாணிக்கம் குடும்பத்திற்குமிடையே நிலத்தகராறு தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மதியழகனை கொலை செய்ய திட்டமிட்ட மாணிக்கம் குடும்பத்தினர்,

fire bath 1 - 2026

மதியழகன் நொச்சிமேட்டு பகுதியில் இருந்து மலையரசம்பட்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மாணிக்கம் மற்றும் ஒரு சிலர் மதியழகனை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி தூவி, ஈட்டி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்தை அறுத்துள்ளனா்.

பின்னர் மயங்கிய விழுந்த மதியழகன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இதுகுறித்து ஊர் மக்களுக்கு தகவல் பரவ, கரியாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது.

dead bady - 2026

மலையரசம்பட்டு கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததாலும், வனப்பகுதி என்பதாலும், 6 கி.மீ நடந்து சென்று ஒரு நாள் தாமதமாக மதியழகனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

complaint 2 1 - 2026

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து மதியழகன் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம், அவரது மகன் ராமே‌ஷ்வரன், மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் காட்டு ராஜா, ரஞ்சிதா, சகாதேவன், தீர்த்தன் ஆகிய 7 பேர் மீது கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.