மச்சினிச்சிய கடற்கரைக்கு கூட்டி போய்… மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்த மாமியார்!

உள்ளூர் செய்திகள் சென்னை புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
Merina Beach - 2026

சென்னையில் உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் .இவரது மனைவி திவ்யா. சரவணன் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஒருநாள் திருமுல்லைவாயலில் உள்ள தன் மனைவியின் 19 வயதான இளைய சகோதரியை தனியாக பேச வேண்டும் என அழைத்துள்ளார்.

அப்போது அந்த பெண் தனது அக்காள் கணவர் தானே ஏதாவது முக்கியமான விஷயம் பேசவேண்டியிருக்கும் என்ற எண்ணத்தில் ரயிலில் கொளத்தூருக்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து மின்சார ரயில் மூலம் கடற்கரை நிலையம் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது சரவணன் தனது மனைவியின் சகோதரியை கையை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்துள்ளார்.பின்னர் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றதுடன் அவருடன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

அக்காள் கணவர் வித்தியாசமாக நடந்துகொள்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பித்ததுடன் பெற்றோர் உதவியுடன் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.