போராட்டத்தின் காரணமாக மன்னிப்பு கோரிய தக்கலை நூருல் இஸ்லாம் கல்லூரி நிர்வாகி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
kanyakumari noorulislamcollege - 2026

இந்துமுன்னணியினர் நடத்திய போராட்டத்தின் காரணமாக நூருல் இசுலாம் கல்லூரி நிர்வாகி மன்னிப்பு கோரினார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் நூருல் இஸ்லாம் கல்லூரியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் மாணவர்கள் கோஷம் போட்டனர். இவ்வாறு கோஷம் போட்ட மணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கல்லூரியின் நிர்வாகி மஜித்கானிடம் இந்து முன்ணணி, பாஜக நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

ஆனால் அவர்களது புகார்களைக் குறித்து சிறிதும் கவனத்தில் கொள்ளாத அவர் இது எமது கல்லூரி! நாங்கள் இப்படி தான் செய்வோம்! நீங்கள் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று கூறி தகாத முறையில் பேசினார்.

இதனால் வருத்தம் அடைந்த இந்துமுன்னணி, பாஜக., நிர்வாகிகள், கல்லூரி நிர்வாகி மஜித்கான் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கல்லூரி முற்றுகை போராட்டத்தினை நடத்தினர். இந்தப் போராட்டத்தின் காரணமாக நூருல் இஸ்லாம் கல்லூரி நிர்வாகி மஜித்கான் மன்னிப்பு கேட்டார். மேலும் அவ்வாறு கோஷமிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

  • கேரளபுரம் சங்கர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.