திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவிலில் திருக்கல்யாணத் திருவிழாவுக்கான பந்தக்கால் கொடியேற்றம் நடைபெற்றது.
நெல்லையில் நேற்று இந்து முன்னணி பேரியக்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சங்பரிவார் அமைப்புகள் நெல்லையப்பர் திருக்கோவிலில் ஐப்பசி மாத திருக்கல்யாணம் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தின. அப்போது, காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள், கோவில் அறநிலைத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இத்திருவிழா நடக்கும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை அதிகாலை 4.30க்கு அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருகோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவுக்காக பந்தக்கால் நடும் விழாவும், அதைத் தொடர்ந்து கொடியேற்றமும் சிறப்பாக நடைபெற்றது.