Homeகட்டுரைகள்மனு ஸ்மிருதியா, மார்க்ஸ் ஸ்மிருதியா? (பகுதி - 4)

மனு ஸ்மிருதியா, மார்க்ஸ் ஸ்மிருதியா? (பகுதி – 4)

manu-marx
manu-marx

மனு ஸ்மிருதியா, மார்க்ஸ் ஸ்மிருதியா? (பகுதி – 4)
– வேதா.டி.ஸ்ரீதரன் –

நாம் எவ்வாறு மூளைச்சலவை செய்யப்படுகிறோம்?

மேலும் சில சுலோகங்களைப் பார்க்கலாம்.

சுலோகம் 4.14

ஸம்ஸ்கிருத மூலம்:

வேத உதிதம் ஸ்வகம் கர்ம நித்யம் குர்யாத் அதந்த்ரித:
தத் ஹி குர்வந் யதா சக்தி ப்ராப்நோதி பரமாம் கதிம்.

பொருள்:

தனக்கு வேதத்தால் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை (சடங்குகள், இதர கடமைகள் ஆகிய அனைத்தையும்) சோர்வடையாமல் செய்து வருவானாக. தனது சக்திக்கு ஏற்ற விதத்தில் இவ்வாறு செய்து வருபவன் உயர்ந்த கதியை அடைகிறான்.

அலைகள் வெளியீட்டக ஸ்மிருதியில்:

அவனவன் வருணாசிரமத்துக்கு உகந்தவையென்று வேதத்திலும் அறநூல்களிலும் விதிக்கப்பட்ட அன்றாடக் கடமைகளைச் சோம்பரின்றிச் செய்க. அதனால் நற்கதியுண்டு.

எனது விளக்கம்:

இதுதான் முடை நாற்றமெடுக்கும் சிவப்பு வாடை எனப்படுவது.

அலைகள் வெளியீட்டகம் தந்துள்ள மொழிபெயர்ப்பில் காணப்படும் ‘வருணாசிரம’ என்ற பதம் ஸம்ஸ்கிருத மூலத்தில் இல்லவே இல்லை. இது சிவப்பு மூளையில் உதித்ததே தவிர மனு ஸ்மிருதியில் காணப்படவில்லை.

த்விஜன் என்ற பதத்துக்கு நேர் தமிழ்ச்சொல்லான பார்ப்பனன் (இதுவே மருவி, பார்ப்பான் என்றானது.) என்ற சொல் இப்போது பிராமணர்களைக் கொச்சையாகக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம். திவிஜ, பார்ப்பன ஆகிய இரண்டு சொற்களும் மிகவும் உயர்வானவையே. ஆனால், தற்காலத்தில் பார்ப்பான் என்ற சொல் இழிவாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோலவே, வர்ணாசிரம தர்மம் என்ற சொல்லும் தற்காலத்தில் ஹிந்து மதத்தை இழிவாகப் பேசுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பதம் மிக அழகானது. ஆனால், இது ”வர்ண அடிப்படையில் மனிதர்களை இழிவுபடுத்தும் ஹிந்து மதம்” என்று பொருள்படும் விதத்தில் மார்க்ஸிஸ்டுகளால் திட்டமிட்டு கோயபல்ஸ் பிரசாரம் செய்யப்படுகிறது.

manudarma-dm
manudarma-dm

சுலோகம்: 8.112

ஸம்ஸ்கிருத மூலம்:

காமிநீஷு விவாஹேஷு கவாம் பக்ஷ்யே ததா இந்தநே
ப்ராஹ்மண அப்யுபபத்தௌ ச சபதே ந அஸ்தி பாதகம்.

பொருள்:

பெண்களுக்கு, விவாகத்தின் பொருட்டு, பசுக்களின் தீவனத்துக்காக, (விறகு, சமித்து முதலான) எரிபொருளுக்காக, பிராமணனுக்கு ஆதரவு தருவதற்காக (ஆகிய காரணங்களுக்காக) வாக்குத் தருவதில் தவறில்லை.

அலைகள் வெளியீட்டக ஸ்மிருதியில்:

அநேகம் பெண்டுகளையுடையவன் அவர்களுடன் தனது புணர்ச்சி பற்றியும், திருமணம் பற்றியும், கால்நடைத் தீவனம் பற்றியும், ஓம சமித்துகள் பற்றியும், அந்தணரைக் காக்கும் பொருட்டும் பொய்ச்சத்தியம் பண்ணினாலும் பிழையில்லை.

எனது விளக்கம்:

வாக்குத் தருவது என்பது செய்கையின் முடிவைக் காட்டவில்லை. அது, நிச்சயம் செய்வேன் என்ற உறுதிமொழி மட்டுமே. அது நிறைவேறாமல் போவதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே, வாக்குத் தருவதற்கு முன் சிந்தித்துச் செயல்பட வேண்டும். ஆனால், இங்கே தரப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வாக்குத் தருவதற்குத் தயக்கம் தேவையில்லை என்பதையே மனு சுட்டிக் காட்டுகிறார். பொய்ச்சத்தியத்தை அல்ல. இந்தக் கடமைகள் அதிமுக்கியமானவை என்பது இதன் கருத்து.

அலைகள் வெளியீட்டக மொழிபெயர்ப்பைப் பார்த்ததுமே நீங்கள் ”அநேகம் பெண்டுகளையுடையவன் அவர்களுடன் தனது புணர்ச்சி பற்றியும்” என்பது சிவப்புச் சொருகல் என்பதைக் கவனித்திருப்பீர்கள். கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால், வாக்குறுதி தருவது (அல்லது சத்தியம் செய்வது) என்பது பொய்ச்சத்தியமாகி விட்டதையும் கவனித்திருப்பீர்கள்.

ஆனால், உண்மையில் சிவப்பு ஆட்டம் இவை இரண்டையும் தாண்டியது. அலைகள் வெளியீட்டில் கால்நடைத் தீவனம் என்று போட்டிருக்கிறார்களே, அது, ஸம்ஸ்கிருத மூலத்தில் பசுக்களின் தீவனத்துக்காக என்று உள்ளது. இதுதான் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

ஸம்ஸ்கிருதத்தில் ‘கோ’ என்றால் தமிழில் ‘பசு’ என்று பொருள். அதேநேரத்தில், ஸம்ஸ்கிருதத்தில் ‘பசு’ என்று சொன்னால் தமிழில் ‘கால்நடை’ என்று பொருள்.

எங்கெல்லாம் பசுவைப் பற்றி உயர்வாகப் பேசப்படுகிறதோ, அத்தகைய இடங்களில் ‘பசு’ என்பதற்குப் பதில் ‘கால்நடை’ என்று பேசுவது கம்யூனிஸ்டுகளின் வழக்கம். புலால் உணவு போன்ற இடங்களில் ஸம்ஸ்கிருதத்தில் ”கால்நடைகளைக் கொல்வது” என்று சொல்லப்படும் இடங்களில், இந்தக் கம்யூனிசப் படுபாவிகள் அதை ”பசுவைக் கொல்வது” என்று மொழிபெயர்ப்பார்கள்.

மேலே உள்ள சுலோகம் இதற்குச் சிறந்த உதாரணம். இங்கே பசுவின் தீவனம் பேசப்படுகிறது. அலைகள் வெளியீட்டக ஸ்மிருதி அதை கால்நடைத் தீவனம் என்று மொழிபெயர்க்கிறது. இதே நூலின் வேறு பல இடங்களில் ‘கால்நடைகள்’ என்பதை வேண்டுமென்றே ‘பசு’ என்று போட்டிருக்கிறார்கள்.

இதேபோல, ஸம்ஸ்கிருதத்தில் ‘மது’ என்று சொன்னால் தமிழில் ‘தேன்’ என்று பொருள். ஆனால், இந்தக் கம்யூனிஸ்டு களவாணிகள் அதை ‘மது’ என்று தமிழில் மொழிபெயர்ப்பார்கள்.

பிராமணனே பசுவைக் கொன்றான், ஹிந்துக்கள் அனைவரும் பசு மாமிசம் சாப்பிடுவோர்தான், ரிஷிகள் குடிகாரர்கள், பிராமணர்கள் யாகத்தின்போது குடித்தார்கள் – முதலிய எத்தனையோ விதண்டாவாதக் கருத்துகளின் ஆதார சுருதியாக அமைவது, நமது சாஸ்திர நூல்களை வெளியிடுவது என்ற பெயரில் இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான கருத்துகள் நம் மனதில் விதைக்கப்படுவதுதான்!

manu
manu

சுலோகம் 9.19:

ஸம்ஸ்கிருத மூலம்:

ததாச ச்ருதயோ பஹ்வயோ நிகீதா நிகமேஷ்வ அபி
ஸ்வாஸ்க்ஷண்ய பரீக்ஷார்த்தம் தாஸாம் ச்ருணுத நிஷ்க்ருதீஹி.

பொருள்:

அதுபோலவே, பெண்களின் உண்மை (மன) இயல்பை விளக்கும் (விதத்தில்) வேத வாக்கியங்கள் நிறைய பாடப்பட்டுள்ளன (சொல்லப்பட்டுள்ளேன). இவற்றில் பிராயச்சித்தத்துக்கு உரிய பகுதிகளையும் கருத்தில் கொள்வீர்களாக.

அலைகள் வெளியீட்டக ஸ்மிருதியில்:

பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றையும் கேட்பீர்களாக.

எனது விளக்கம்:

சும்மாவே வாயை மெல்லும் நைஷ்டிக பிரம்மசாரிகளின் வாய்களுக்கு அவல் போடும் காரியத்தைச் செய்வதற்காகவே இது போன்ற ”புனிதமான” சாத்திரங்கள் கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்படுகின்றன.

இத்தகைய முயற்சிகள் நமது பள்ளி, கல்லூரிப் பாடப் புத்தகங்களில் மிக அதிகம் காணப்படுகின்றன. அதிலும், சமச்சீர் புத்தகங்களோ, கேட்கவே வேண்டாம். கேவலமான மனிதர்களால் கேவலமான விதத்தில் உருவாக்கப்பட்டவை அந்தப் பாடநூல்கள்.

என் சமுதாய மக்களை இழிவாகச் சித்தரித்து, பூணூலையும் குடுமியையும் அறுத்து, கட்சிக்காரர்கள் என்ற பெயரில் பொறுக்கிகளையும் ரவுடிகளையும் கொண்டு எம் குலப் பெண்டிரை மானபங்கப்படுத்தும் முயற்சிகளை ஊக்குவித்த அயோக்கிய சிகாமணி ஈ. வெ. ராமசாமியை ‘அவதார புருஷன்’ என்றும்,

தன்னால் கைபிடிக்கப்பட்ட காதல் மனைவியை ‘தே….’ என்று தனது ரவுடி நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்த ஆணாதிக்க வெறி பிடித்த மிருகத்தை, ஈரோட்டின் உயர்ந்த தாஸி வீடுகளைத் தனக்குப் புகலிடமாகக் கொண்டிருந்த ஸ்திரீலோலனை, 75 வயதில் 25 வயதுப் பெண்ணை – அதுவும், வளர்ப்பு மகளையே – திருமணம் முடிந்த அந்தக் காட்டுமிராண்டியை ‘பெண்ணுரிமைக் காவலன்’ என்றும்

வர்ணிக்கும் பாடத்தைப் பள்ளி இறுதி வகுப்புக்கான தமிழ்ப் பாடநூலில் வைத்து, என் பிள்ளைகள் அதைப் படித்தே தீர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தினார்கள் இந்தக் கயவர்கள்.

– இதுதான் சமச்சீர்க் கல்வி.

நம்மில் எத்தனை பேர் பள்ளி, கல்லூரி பாடநூல்களைக் கருத்தூன்றிப் படித்துப் பார்த்திருக்கிறோம்? குறிப்பாக, தமிழ் மொழி, வரலாறு ஆகிய பாடங்களின் நூல்களை தயவு செய்து படித்துப் பாருங்கள். இந்திய வரலாறும், நமது பாரம்பரியப் பெருமையும் எவ்வளவு தூரம் கொச்சைப்படுத்தப்பட்டு நமது பிள்ளைகளுக்குப் போதிக்கப்படுகின்றன, ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான இளம் மாணவர்கள் எவ்வாறு திட்டமிட்ட ரீதியில் அரசாங்க உதவியுடன் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பது  அப்போதுதான் உங்ளுக்குப் புரியும்.

நம்மைச் சுற்றி எத்தகைய சதி வலைகள் பின்னப்பட்டு வருகின்றன என்பதை விளக்குவதற்காகவே மிகுந்த மனக்குமுறல்களுடன் இந்தத் தகவல்களைக் குறிப்பிடுகிறேன்.

இதுவரை காட்டிய உதாரணங்களே போதும் என நினைக்கிறேன்.


நமது கல்விப் பாரம்பரியம் என்பது முழுக்க முழுக்க உபதேச பாரம்பரியம்தான். இங்கே வாய்மொழி உபதேசம்தான் முக்கியமே தவிர, புத்தகம் அல்ல.

manusmiriti
manusmiriti

மனு ஸ்மிருதியையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். மனு எந்தக் காலத்திலும் எந்த நூலும் எழுதவில்லை. பிரம்மா, மனு, தக்ஷப் பிரஜாபதிகள், (அந்தப் பிஜாபதிகளில் ஒருவரான பிருகு மூலம்) மகரிஷிகள் என்று வந்த வாய்மொழி உபதேசமே நம் தேசம் முழுவதும் மனுதர்ம சாஸ்திரம் என்று விரிந்து, கிளை பரப்பி இன்று நூல் வடிவத்துக்கு வந்துள்ளது.

இத்தகைய உபதேசங்கள் புத்தகங்களாக ஏட்டுச் சுவடிகளில் எழுதி வைக்கப்படுவது உண்டு. எனினும், அவை அந்தந்த உபதேசங்களைப் பாதுகாக்கும் முயற்சியே தவிர, புத்தக அறிவுக்கு முக்கியத்துவம் தருவதற்காக எழுதப்பட்டவை அல்ல. இவ்வாறு ஏடுகளில் எழுதி வைக்கப்படும் வடிவங்களைப் பராமரிப்பது பெரிய வேலை. இதற்காகவே ஆலயங்களிலும் அரண்மனைகளிலும் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்தச் சுவடிகளைப் பாதுகாக்கும் வேலைக்காகவும், பிரதி எடுத்துப் பராமரிப்பதற்காகவும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு பிரதி எடுக்கும்போது ஏற்படும் குறைபாடுகளாலும் (எழுத்துப் பிழைகள், இலக்கணப்பிழைகள், வார்த்தைகள் விடுபடுதல், சுலோகங்களே காணாமல் போவது முதலானவை) உபதேச பாரம்பரியத்தில் ஏற்படும் தொய்வுகளாலும் நமது சாஸ்திரங்கள் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வடிவங்களில் காட்சியளிப்பது உண்டு. (உதாரணமாக, வெள்ளையன் இங்கே ஆட்சி அமைத்தபோது, நமது நாட்டில் சுமார் 50 வகைகளுக்கும்  மேற்பட்ட மனு ஸ்மிருதிகள் காணப்பட்டதைக் குறிப்பிடலாம்.) இவற்றையே பாடபேதங்கள் என்று நாம் அழைக்கிறோம்.

இதுபோன்ற காரணங்களால்தான், ”புத்தக அறிவு குறையுள்ளது, தகுந்த குருவை நாடி உபதேசம் பெற்றுக்கொள்” என்று நமது பெரியவர்கள் மிகவும் வலியுறுத்திச் சொல்கிறார்கள்.

குருவின் இடத்தை கூகுளும், (அலைகள் வெளியீட்டகம் உள்ளிட்ட) பதிப்பகங்களும், மொபைல் அப்ளிகேஷன்களும் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ள இத்தகைய சூழலில் நமது வருங்கால சந்ததியருக்கு நாம் எத்தகைய சாஸ்திரங்களை விட்டுச் செல்லப் போகிறோம்?

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,791FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள்-ரசிகர்களுக்கு விருந்து..

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி படத்தின் பெயர் இன்று வெளியாகியுள்ளது....

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

Latest News : Read Now...