வீட்டில் தனித்திருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! அண்ணன் காவல்நிலையத்தில்..

Published:

vankodumai - 2026

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்த தம்பதிக்கு ஒரு ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும் இருக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், தந்தை வீட்டை விட்டு வெளியேறி வேறொரு பெண்ணை மணந்து கொண்ட நிலையில், இரண்டு பேரும் தாயுடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சிறுவன்(15) தாய் வீட்டில் இல்லாத நேரமாய் பார்த்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனைத் தாயிடம் சொல்லக் கூடாது என்றும் அந்த சிறுமியிடம் மிரட்டி உள்ளார்.

இதனால் அந்த சிறுமி தன்னுடன் பள்ளியில் படிக்கும் தோழியிடம் இதனை பற்றிக் கூறியுள்ளார். அந்த தோழி அவளுடைய பெற்றோர்களிடம் தெரிவிக்க, அவர்கள் மூலம் சிறுவனின் தாய்க்கு இதனைப் பற்றித் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், சிறுவனைக் கண்டித்ததோடு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், சிறுவனைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

அந்த சிறுவனிடம் இருந்து ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அதனை அவர் வீடியோ எடுத்துள்ளாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img