கேரள எல்லை செங்கோட்டையில்… கரோனா வைரஸ் விழிப்பு உணர்வு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
sengottai corona vigilance - 2026

செங்கோட்டையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் வைத்து செங்கோட்டை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை சார்பில் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய தடு;ப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர்(பொ)கண்ணன் தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் மகேஸ்வரன், சுகாதார மேற்பார்வையாளர் முத்தமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் தலைவர் எம்எஸ்.ராமகிருஷ்ணன், செயலாளர் செய்யதுசுலைமான், பொருளாளர் பால்ராஜ் ஆகியோர் பேரூந்து நிலையத்தில் விழிப்புணர்வு குறித்த விளம்பர பேனர் வைக்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், மாணவ, மாணவியர்களிடம் வழங்கி முன்னெச்சரிக்கையாக இருந்து வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மேலபஜார், கீழபஜார், தாலூகா அலுவலகம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.