தகுந்த இடைவெளி விட்டு பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறநிலையத்துறையினர் தகுந்த இடைவெளி விட்டு பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என, ஆலய பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆன்லைன் வழி செயற்குழுக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் மாரிச் செல்வம் தலைமை வகித்தார்.
இக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானம்… கொரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க நிர்வாகிகள், செயலர் பத்மநாபன், மாநில அமைப்பாளர் சுடலைமணி, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: ரவிச்சந்திரன், மதுரை