ஆவுடையார்கோயிலில் துாய்மை பணியாளர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கல்.
ஆவுடையார்கோயிலில் துாய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்து பொருட்களை வழங்கினார்.முன்னாள் கவுன்சிலர் நரேந்திரஜோதி,தாசில்தார் மார்டின் லுாதர்கிங்,வர்த்தக சங்க தலைவர் முத்துகருப்பையா ஊராட்சி தலைவர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மளிகை மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டது நிகழ்வில் துணை தாசில்தார் ஜபருல்லா,ஊராட்சிதலைவர்கள் திருப்பெருந்துரை சந்திரா,பூவலுார் சரவணபெருமாள்,குன்னுார்காளிமுத்து,,ஒப்பந்ததாரர் மோகன்ராஜ்,ஊராட்சி துணை தலைவர் பிரியா,முன்னாள் ஊராட்சி தலைவர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.




