வழிபாட்டுத் தலங்களைத் திறந்தால்… சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்: தமிழக அரசின் வாதம்!

சற்றுமுன் சென்னை தமிழகம்
மதுரை அண்ணாநகரில் அடைக்கப்பட்டுள்ள சேவுக பெருமாள், வேங்கடாசலபதி கோயில்.
மதுரை அண்ணாநகரில் அடைக்கப்பட்டுள்ள சேவுக பெருமாள், வேங்கடாசலபதி கோயில்.

தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது; சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது தொடர்பாக, மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசுத் தரப்பில், நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்ணை ஏற்படும் என்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாது என்றும், பாதுகாப்பு கொடுக்க போதிய காவலர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து, தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களை திறக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.