அழுகிய நிலையில் இளம்பெண் சடலம்! சம்மதிக்காததால் சாகடித்தனராம்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
kumudipundi

கும்மிடிப்பூண்டி அருகே காப்புக் காட்டில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம் பெண்ணை கொன்று புதைத்துவிட்டோம் என கள்ளக்காதலனின் நண்பர் போலீசிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து கள்ளக்காதலன் மற்றும் உதவிய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பூவலம்பேடு ஊராட்சி, வாணியமல்லி காப்பு காடு உள்ளது. இங்கு அழுகிய நிலையில் பெண் சடலத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாதிரிவேடு போலீசார் கைப்பற்றினர். இதை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்கள்.

இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.