கனவின் விளைவு: இப்படி கண்டால் வெளிநாடு செல்லும் யோகம்!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1

ஒட்டடை: வீட்டுச் சுவரில் அல்லது கூரையில் நூலாம்படை அப்பியிருப்பது போல கனவு கண்டால், குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படும்.

தான் ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு காண்பது, நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதற்கு அறிகுறியாகும். தொழில் அபிவிருத்தியடையும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஸித்திக்கும்.

கனவில் ஓசைகளைக் கேட்பது நல்லதல்ல. பேரோசையைக் கேட்பது, கள்வர்களால் பொருள் இழப்பு நேர்வதோடு, துன்பம் விளைவதையும் குறிக்கும். சிறிய ஓசையைக் கேட்பதுபோல் வரும் கனவு, வீண் சச்சரவுகள் ஏற்படுவதைக் குறிக்கும்.

கனவில் வேள்விக் குண்டம், ஹோமத் தீ முதலானவற்றைக் காண்பவர், தெய்வ அருள் பெற்றவராகி பல்வேறு நற்பேறுகளையும் அடைவார்.

கனவில் கடலைக் காண்பவர்கள், சிறிது முயற்சி செய்தால் வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாக ஸித்திக்கும். இல்லையேல், அயல் தேசத்தாருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு பெரும் பொருள் ஈட்டுவர். பிற தேச உறவுடைய அலுவலகங்களில் வேலை கிடைக்கும்.

ஆபத்து உண்டாக்கும் கண்டங்களில் சிக்கிக் கொள்வதுபோல கனவு காண்பது நன்மையையே தரும். ஆனால், பிறர் கண்டங்களால் பாதிக்கப்பட்டது போல, கனவு காண்பது கெடுதலானது.

திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், இப்படி கனவு கண்டால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

கஷ்ட திசையில் சிக்கித் தவிப்பதுபோல் வரும் கனவு, நேர்மாறான பலனைத் தரும். வாழ்க்கையில் உயர்வும் புகழும் ஸித்திக்கும்.

கற்பூரம் எரிவதுபோல் கனவு கண்டால், பிறருக்காக சாட்சி சொல்லவோ அல்லது ஜாமீன் கொடுக்கவோ நேரிடலாம்.

:கன்றுக்குட்டியைக் கனவில் கண்டால், செல்வ சேமிப்பு ஏற்படும்.

தோன்றும்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.