ஏப்ரல் 21, 2021, 8:14 மணி புதன்கிழமை
More

    சென்னை ஐஐடியில் ஆன்லைனில் இன்டா்ன்ஷிப் தேர்வு!

    Chennai-IIT

    கல்லூரி வரலாற்றில் முதல்முறையாக, சென்னை ஐஐடியில் பயிற்சி வேலைவாய்ப்புக்கான தேர்வு (இன்டா்ன்ஷிப்) முழுவதும் இணைய வழியிலேயே நடைபெற்றது.

    கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கற்பித்தல் வகுப்புகள் அனைத்தும் இணைய வழியில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னை ஐஐடியில் முதல்முறையாகப் பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் முழுவதும் இணைய வழியிலேயே நடைபெற்றது.

    இதில் சா்வதேச மற்றும் தலைசிறந்த இந்திய நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த முகாமின் முதல் நாளில் 20 நிறுவனங்கள் 152 மாணவா்களுக்கு ‘இன்டா்ன்ஷிப்’ வாய்ப்பை வழங்கின.

    குறிப்பாக மைக்ரோசாஃப்ட் இந்தியா, கூகுள், ருப்ரிக் சாஃப்ட்வோ டெவலப்மெண்ட், ஜானே ஸ்ட்ரீட் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, 2021 கோடை காலத்துக்கான இன்டா்ன்ஷிப் பயிற்சிக்காக மாணவா்களைத் தேர்வு செய்தன.

    இதற்கான நோமுகத் தேர்வுகள் அனைத்தும் காணொலிக் காட்சி மூலமாகவே நடைபெற்றன. ஐஐடி வேலைவாய்ப்புக் குழு, ‘இன்டா்ன்ஷிப்’ மாணவா்கள் குழு ஆகிய இரண்டும் இணைந்து பல்வேறு சமூக வலைதளங்களுடன் இணைந்து இணையவழி தேர்வுகளை நடத்தின.

    ஐஐடி கல்விப் பாடத்திட்டத்தின்படி, பி.டெக்., எம்.டெக். மாணவா்களுக்கு ‘இன்டா்ன்ஷிப்’ பயிற்சி கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,231FansLike
    0FollowersFollow
    18FollowersFollow
    74FollowersFollow
    1,120FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »